Comedy Raja Kalakkal Rani: காமெடி நட்சத்திரங்களுடன் ஜோடி சேரும் சீரியல் பிரபலங்கள் - விஜய் டிவி-யின் புதிய ப்ரோமோ!

காமெடி ராஜா கலக்கல் ராணி ப்ரோமோ

’காமெடி ராஜா கலக்கல் ராணி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில் விஜய் டிவி காமெடி நட்சத்திரங்களுடன் சீரியல் பிரபலங்கள் கலந்துக் கொண்டு கலக்கவிருக்கின்றனர்.

  • Share this:
    காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற புதிய நிகழ்ச்சியின் ப்ரோமோக்களை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.

    பல்வேறு விதமான காமெடி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி, ரசிகர்கள் மகிழ்விப்பது விஜய் டிவி-யின் பாணி. கலக்கப்போவது யாரு, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ், கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம். அதோடு சமையலையும், காமெடியையும் இணைத்து ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் 2 சீசன்களை ஒளிபரப்பியது விஜய் டிவி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    குறிப்பாக சமீபத்தில் தான் ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சி நிறைவடைந்தது. அதில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட நிலையில் போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஒவ்வொரு குக்குக்கும், கோமாளிக்கும் பெரிய ரசிகர் பட்டாளங்கள் உருவாகின. இதில் வின்னராக கனியும், ரன்னர்களாக ஷகிலா மற்றும் அஸ்வினும் இடம் பெற்றனர். குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், புதிய காமெடி நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.





    ’காமெடி ராஜா கலக்கல் ராணி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில் விஜய் டிவி காமெடி நட்சத்திரங்களுடன் சீரியல் பிரபலங்கள் கலந்துக் கொண்டு கலக்கவிருக்கின்றனர். இந்நிகழ்ச்சி வரும் ஜூன் 27-ம் தேதி மதியம் 1.30 மணி முதல் ஒளிபரப்பாகவிருக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: