Home /News /entertainment /

அரபிக் குத்து பாடலுக்கு விஜய் டிவி பிரபலங்கள் வேற லெவல் டான்ஸ் - வைரலாகும் வீடியோ

அரபிக் குத்து பாடலுக்கு விஜய் டிவி பிரபலங்கள் வேற லெவல் டான்ஸ் - வைரலாகும் வீடியோ

சீரியல் பிரபலங்கள்

சீரியல் பிரபலங்கள்

காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி இப்பாடல் வெளியாகி ட்ரெண்ட் ஆகியது. இப்பாடலை அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடி உள்ளனர்.

  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடிகர் விஜய் என்றால் அனைவருக்குமே அவ்வளவு பிடிக்கும். அந்த அளவிற்கு எல்லோரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவரின் திரைப்படங்களில் குறைந்தது ஒரு பாடலாவது வைரலாவது வழக்கம். அந்த வகையில் தற்போது, பீஸ்ட் திரைப்படத்தின் முதல் பாடல் ரிலீஸாகி ட்ரெண்டிங்கில் உள்ளது. எங்கு பார்த்தாலும், அதன் முதல் பாடலான 'அரபிக் குத்து' பற்றிய செய்திகள் தான் வந்தவண்ணம் உள்ளது.

  இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ், மோஜ், ஜோஷ் போன்ற எல்லா வகையான வீடியோ தளங்களிலும் அரபிக் குத்து தான் பட்டைய கிளப்புகிறது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், கிங்ஸ்லி போன்ற முன்னணி பிரபலங்கள் இந்த ‘பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த அரபிக் குத்து பாடலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை கொடுத்துள்ளார்.

  இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் பீஸ்ட் படம் உருவாகி உள்ளது. வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தை வெளியிட உள்ளதாக அதிகாரப் பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ (Arabic kuthu) பாடல் புரோமோ பலரையும் கடந்த வாரம் புதுமையான முறையில் வெளியிடப்பட்டு இருந்தது. இதில் அனிருத், சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் ஆகியோர் வேடிக்கையான முறையில் அரபிக் குத்து பாடல் பற்றிய அறிமுகத்தை தந்திருந்தனர்.

  இந்த புரோமோ வீடியோ ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. அதன்படி காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி இப்பாடல் வெளியாகி ட்ரெண்ட் ஆகியது. இப்பாடலை அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடி உள்ளனர். எங்கு பார்த்தாலும் இவர்களின் அரபிக் குத்து காம்போ தான் ஸ்டேட்டஸாக தெறிக்க விடப்படுகிறது. இவர்கள் கூட்டணியில் இதற்கு முன்னதாக டாக்டர் படத்தின் செல்லம்மா பாடல் மிகப்பெரிய பெற்றது. இவர்கள் மீண்டும் இணைந்து தரமான பாடல் ஒன்றை தற்போது தந்துள்ளனர்.

  வலிமை படத்தைப் பார்த்த பெற்றோர்... மனம் நெகிழ்ந்த அஜித்!

  இந்த அரபிக் குத்து பாடலின் டான்ஸ் மூவ்ஸ் குழந்தைகள் முதல் இளசுகள் வரை கவர்ந்துள்ளது. நடிகர் விஜய்யின் சூப்பர் ஸ்டைலிஷ் நடனம் இந்த பாடலை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறது. இந்த பாடலுக்கு பல பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் ரீல்ஸ், டிக் டாக், ஷார்ட்ஸ் ஆகியவற்றை செய்து வருகின்றனர். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன. அதே போன்று, விஜய் டிவி பிரபலங்களும் இந்த பாடலுக்கு சிறப்பாக நடனமாடி உள்ளனர்.

  ஆமாம் நான் காதலிக்கிறேன்... மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!   
  View this post on Instagram

   

  A post shared by Rithika Tamilselvi (@tamil_rithika)

  'அரபிக் குத்து'' பாடலுக்கு பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலங்களான வெண்பா, வினுஷா மற்றும் குக் வித் கோமாளி சீசன் 2 பிரபலமான ரித்விகா, டாப் சீரியலான தமிழும் சரஸ்வதியும் பிரபலம் தமிழ் ஆகியோர் சிறப்பாக நடனமாடி உள்ளனர். இந்த வீடியோவை குக் வித் கோமாளி ரித்விகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பலர் பார்த்து வருகின்றனர். மேலும் விஜய் டிவி ரசிகர்கள் பலர் இதற்கு கமெண்ட் செய்தும் வருகிறார்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: TV Serial, Vijay tv

  அடுத்த செய்தி