• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக் பாஸ் வீட்டில் ஆரம்பித்த சண்டை - கடுப்பான சிபி, கண்கலங்கும் ஸ்ருதி!

பிக் பாஸ் வீட்டில் ஆரம்பித்த சண்டை - கடுப்பான சிபி, கண்கலங்கும் ஸ்ருதி!

கண்கலங்கும் ஸ்ருதி

கண்கலங்கும் ஸ்ருதி

ரசிகர்கள் எதிர்பார்த்த சண்டை பரபரப்புகள் இன்று ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியில் இருப்பது இன்று வெளியான முதல் ப்ரோமோவில் உறுதியாகியுள்ளது.

  • Share this:
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாட்களை கடந்துள்ள நிலையில் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் பலரும் முகம் தெரியாதவர்களாக இருப்பதால் எப்பொழுது சண்டைகள் வர ஆரம்பிக்கும் என்று மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இதனிடையே நேற்றைய நிகழ்ச்சியில் முதல் லக்க்ஷுரி டாஸ்காக ‘’ஒரு கத சொல்லட்டுமா?” என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்கையில் நடந்த கதை பற்றி சொல்ல வேண்டும். மேலும் ஒருவர் பேசி முடித்தவுடன் அவர்கள் கூறிய கதைக்கு டிஸ் லைக்ஸ், லைக்ஸ், ஹார்ட் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

அதன்படி போட்டியாளர்களுக்கு பாய்ண்ட்ஸ்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த டாஸ்கில் முதலில் இசைவாணியை பேசுமாறு பிக் பாஸ் அழைக்க அவரும் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து கண்கலங்கியவாறு பேசினார். பின்னர் அவரது கதையை கேட்டு சக ஹவுஸ் மேட்ஸ் லைக்ஸ், ஹார்ட் கொடுக்க அழுத இசைவாணி முகத்தில் சிரிப்பு.

இதனிடையே சிபி, வருண், அபினய், நிரூப் குறித்து அவர்கள் முகத்தை பார்த்தே எப்படி பட்டவர்கள் என கூறுவேன் என்று அபிஷேக் கதை விட்டு கொண்டிருந்தார். பின்னர் தனது அம்மாவிடம் கோபமாக நடந்து கொள்வேன், அப்பா இறந்து விட்டார் என டாஸ்கில் கூற வேண்டிய கதையை கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தினர்.

அடுத்தது சின்ன பொண்ணு கதை சொன்னார். காதல் திருமணம் செய்ததால் குழந்தையை வைத்து கொண்டு ரூ.20 சம்பளத்திற்கு ஊர் ஊராக சுற்றியதாகவும் பேசினார். அவர் கதை நல்லா இருக்கு, ஆனா சொன்ன விதம் நல்லா இல்லை என்று ராஜூ டிஸ்லைக் கொடுத்துவிட்டார். பின்னர் அதுகுறித்து சின்னபொண்ணுவிடம் தனியாகவும் பேசினார். இதனை தொடந்து கும்மி பாட்டுடன் நேற்றைய நிகழ்ச்சி நிறைவடைந்தது.

Also read... நயன்தாரா தயாரிப்பில் நடிக்கும் கவின், வாணி போஜன்?

இந்த நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்த சண்டை பரபரப்புகள் இன்று ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியில் இருப்பது இன்று வெளியான முதல் ப்ரோமோவில் உறுதியாகியுள்ளது. அதில் இமான் அண்ணாச்சி வந்து ஒரு காமெடியன் இந்த டைட்டிலை வின் செய்ய வேண்டும் என்று சொல்ல அதற்கு ராஜு கை தட்டுகிறார். இதனை இப்பொழுது பேச அவசியம் இல்லை என்று நதியா சங் கூற, அது ஒரு பிரச்சனையாக எழுகிறது. அதன் பின் நிரூப் சிரிக்க அதற்கு கோவம் அடையும் சிபி எதுக்கு சிரிக்கிற என்று கோபமடைய வீடே ரணகளமாகியுள்ளது. அப்போது அங்கிருந்த நமீதா வீட்டில் சண்டை வரப்போகிறது என கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், ஸ்ருதி மற்றும் இசைவாணி பேசி கொண்டிருக்கின்றனர். அப்போது பேசும் ஸ்ருதி நான் அழக்கூடாது என்று தான் நினைத்தேன், ஆனால் எனது அழுகை தான் என்னை ஸ்ட்ராங்காக மாற்றுகிறது. எனது கலரை வைத்தே என்னை ஒதுக்கினார்கள், ஆனால் அந்த கலர் தான் என்னை இப்போது இங்கு நிற்க வைத்திருக்கிறது என கண்கலங்கியவாறு கூறுகிறார். எல்லாம் நன்மைக்கே என இசைவாணி, ஐக்கி அவரை சமாதானப்படுத்துகின்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனால் இன்று அவரது கதை குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: