• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil: இந்த வார நாமினேஷனில் வரவுள்ள மாற்றம் - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிக் பாஸ்!

Bigg Boss Tamil: இந்த வார நாமினேஷனில் வரவுள்ள மாற்றம் - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிக் பாஸ்!

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிக் பாஸ்

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிக் பாஸ்

Bigg Boss Tamil: இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை என்பதால், இந்த வாரத்திற்கான நாமினேஷன் இன்று நடைபெற உள்ளது இன்று வெளியான முதல் ப்ரோமோவில் தெரிகிறது.

  • Share this:
விஜய் டிவி-யில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது மூன்று வாரங்களை கடந்துள்ளது. இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நிலையில் முதல் எலிமினேஷனாக நாடியா வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து கடந்த வாரம் அபிஷேக், அக்ஷரா, அபினய், இசைவாணி, சின்னப்பொண்ணு, தாமரை செல்வி, ஐக்கி பெர்ரி, பிரியங்கா, பாவ்னி ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் இருந்த நிலையில் இதில் அபிஷேக் நேற்று வெளியேற்றப்பட்டார்.

கடந்த வாரம் நடைபெற்ற பஞ்சதந்திரம் டாஸ்கில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்தால் அவர், அதில் இருந்து விடுவிக்கப்படுவார் , ஒருவேளை அவர் பெயர் நாமினேஷனில் இல்லை என்றால் அவர் விருப்பப்படும் நபரை சேவ் செய்து கொள்ளலாம் என பிக் பாஸ் அறிவித்திருந்தார். அதன்படி பாவ்னி, தன்னிடம் இருந்த நாணயத்தை கொண்டு அபிஷேக்கை காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால் அந்த நாணயத்தை இந்த வாரம் பயன்படுத்த முடியாது என பிக் பாஸ் அறிவித்ததை தொடர்ந்து அபிஷேக் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.



இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை என்பதால், இந்த வாரத்திற்கான நாமினேஷன் இன்று நடைபெற உள்ளது இன்று வெளியான முதல் ப்ரோமோவில் தெரிகிறது. அதில் பிரியங்கா - சின்னப்பொண்ணுவையும், பாவ்னி - அக்க்ஷராவையும், இசைவாணி மற்றும் தாமரை - இமான் அண்ணாச்சியையும், சின்னப்பொண்ணு, அக்ஷரா, நிரூப் ஆகியோர் பிரியங்காவையும் நாமினேட் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில், இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் பாவ்னி, இசைவாணி, இமான், வருண், அபினய் மற்றும் பிரியங்கா என பிக் பாஸ் அறிவிக்கிறார்.

Also read... மாடர்ன் உடையில் அசத்தும் அனிகா... வைரலாகும் போட்டோஸ்!

மேலும் தற்போது நாமினேட் ஆனவர்களிடம் உள்ள நாணயத்தின் சலுகையை பயன்படுத்தி உங்களுக்கு பதிலாக வேறு ஒருவரை நாமினேஷனுக்கு தேர்வு செய்ய வேண்டும் என பிக் பாஸ் அறிவிக்கிறார். கடந்த வாரம் நடைபெற்ற பஞ்சதந்திரம் டாஸ்கில் வெற்றி பெற்று பாவ்னி, இசைவாணி, நிரூப், தாமரை மற்றும் வருண் ஆகிய ஐந்து பேரிடம் நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என ஐந்து நாணயங்கள் உள்ளன.

இவர்களில் வருண், இசைவாணி மற்றும் பாவ்னி ஆகியோர் நாமினேஷனில் இருந்தாலும் அவர்களிடம் நாணயங்கள் இருப்பதால் இவர்களுக்கு பதிலாக வேறு நபர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என பிக் பாஸ் அறிவிக்கிறார். ப்ரோமோவில், நிரூப், ராஜு மற்றும் சிபி ஆகியோர் காட்டப்படுவதால் இவர்கள் நாமினேஷனில் வருவார்களா? என எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இதனால் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் மாற்றங்கள் ஏற்பட்டு யார் யார் நாமினேட் செய்யப்படுவார்கள், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் இன்றைய நிகழ்ச்சியில் தெரிய வரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: