• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விஜய் டிவி பிக் பாஸ் 5 - தனிமைப்படுத்தலில் முக்கிய பிரபலம்?

விஜய் டிவி பிக் பாஸ் 5 - தனிமைப்படுத்தலில் முக்கிய பிரபலம்?

பிக் பாஸ் கமல்

பிக் பாஸ் கமல்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை ரசிகர்களுக்கு அது தெரிவித்தது.

  • Share this:
    பிரபலம் ஒருவர் குவாரண்டைனில் இருப்பதாக தெரிவித்தது, அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்கிறாரோ என்ற யூகத்தைக் கிளப்பியுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ-க்கள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி மிக முக்கியமானது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி எப்போதும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறும். எப்போதும் ஜூன் மாத இறுதியில் தொடங்கும் பிக் பாஸ் கடந்த வருடம் கொரோனா தொற்றால் தாமதமாக தொடங்கியது.

    இந்த வருடமும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி தாமதமாக தொடங்குகிறது. கடந்த 4 சீசன்களைப் போலவே இந்த சீசனையும் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

    தவிர பிக் பாஸ் 5-ம் சீசனின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியிருக்கிறது. இன்னும் தேதி அறிவிக்கப்படாத நிலையில் பிக் பாஸ் 5 அக்டோபர் 3-ம் தேதி தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிளா (நடிகை ஷகிலாவின் மகள்), நமீதா மாரிமுத்து (நாடோடிகள் 2 பட புகழ்), மாடல் வனேசா குரூஸ், மிஸ்டர் இந்தியா கோபிநாத், பவானி ரெட்டி, பிரியங்கா தேஷ்பாண்டே, ப்ரியா ராமன் uள்ளிட்டோர் கலந்துக் கொள்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

     

    இந்நிலையில் தனது இன்ஸ்டகிராம் ஸ்டோரியின் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் மிளா. அவர் சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோலா ஹோட்டலுக்குள் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை ரசிகர்களுக்கு அது தெரிவித்தது. இருப்பினும், மிளா தனது பிறந்த நாளை அங்கே கொண்டாடியதாகவும் தெரிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: