சின்னத்திரை ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாக்கியிருக்கும் பிக் பாஸ் தமிழ் 5-ன் ப்ரோமோ இன்று மாலை வெளியாகவிருக்கிறது.
தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் முடிவடைந்தது. இதன் வெற்றியாளராக நடிகர் ஆரியை டைட்டிலை வென்றார். இதற்கிடையே கொரோனா தொற்று காரணமாக, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி சமீபத்தில் தான் முடிவடைந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தற்போது, பிக் பாஸ் 5-ம் சீசனுக்கு ரசிகர்கள் தயாராகி வரும் நிலையில், இதனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். கடந்த வாரம் அதற்கான ப்ரோமோ படப்பிடிப்பு நடந்தது. இதையடுத்து எப்போது பிக் பாஸ் 5-ன் ப்ரோமோ வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
''ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது'', ''
நல்லவர் யார் கெட்டவர் யார்'', ''இது வெறும் ஷோ அல்ல நம்ம லைஃப்'', ''தப்புன்னா தட்டி கேட்பேன்... நல்லதுன்னா தட்டிக் கொடுப்பேன்'' போன்ற டேக் லைன்கள் கடந்த 4
பிக் பாஸ் சீசன்களிலும் இடம்பெற்றன. அந்த வகையில் இந்த பிக் பாஸ் சீசன் 5-ல் எந்த மாதிரியான டேக் லைன் இடம்பெறும் என்பதைத் தெரிந்துக் கொள்ளவும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5-ன்
ப்ரோமோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.