• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தாமரை செல்வி-சின்ன பொண்ணு இடையே மோதல் - தீர்த்து வைத்த கமல்!

தாமரை செல்வி-சின்ன பொண்ணு இடையே மோதல் - தீர்த்து வைத்த கமல்!

பிக் பாஸ்

பிக் பாஸ்

வீட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் பலூன் டாஸ்க் நடைபெற்ற போது, ஜெயிக்க போவது நாட்டுப்புற கலையா? நாடக கலையா? என தாமரை கூறியது மனதிற்கு கஷ்டமாக இருந்தது என சின்ன பொண்ணு தெரிவிக்கிறார்.

  • Share this:
    பிக் பாஸ் தமிழ் வெற்றிகரமாக இரண்டாவது வார நிறைவை நெருங்கிவிட்டது. 18 போட்டியாளர்களுடன் பிரம்மாண்டமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது. முதல் வாரம் என்பதால் எலிமினேஷன் இல்லாமல் இருந்த நிலையில் இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. அதில் இந்த வாரம் வீட்டின் தலைவரான தாமரை செல்வி மற்றும் பாவ்னியை தவிர மீதம் உள்ள 15 போட்டியாளர்களும் நாமினேஷன் பட்டியலில் உள்ளனர்.

    கடந்த சீசன்களில், இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்டவர்களால் நாமினேஷன் செய்தால் மட்டுமே போட்டியாளர்கள் எலிமினேஷனுக்கு செல்வார்கள். ஆனால், இந்த ஆண்டு, பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல், ஒரே ஒருவர் நாமினேட் செய்தாலும், அவரும் எலிமினேஷன் பட்டியிலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அதன்படி இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 15 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.

    எலிமினேஷன் இல்லாத முதல் வாரத்திலேயே, அனைவராலும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட திருநங்கை நமீதா மாரிமுத்து திடீரென போட்டியில் இருந்து வெளியேறினார்.பதினெட்டு போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் 5 தற்போது பதினேழு போட்டியாளர்களுடன் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஒருவர் வெளியேறி விட்டதால், இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு வாய்ப்பில்லை என்பதை கமல் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், சூசகமாக கூறியிருந்தார்.

    முதல் புரமோவில் பேசும் கமல், 15 பேர் நாமினேட் ஆகியுள்ள நிலையில் உங்களுடைய வாக்குகள் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்த போகிறது என்பதை பார்ப்போம், இன்றே பாப்போம் என கூறுகிறார். 15 போட்டியாளர்களும் நாமினேட் செய்யப்பட்டுள்ளதால், இன்று இரவு நிகழ்ச்சியில் அதிக வாக்குகள் பெற்று யார் முதலில் சேவ் செய்யப்படுகிறார் என்பது குறித்து தெரியவரும் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.



    இதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில், தாமரை மற்றும் சின்ன பொண்ணு இடையே உள்ள பிரச்னை குறித்து கமல் விவாதிக்கிறார். வீட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் பலூன் டாஸ்க் நடைபெற்ற போது, ஜெயிக்க போவது நாட்டுப்புற கலையா? நாடக கலையா? என தாமரை கூறியது மனதிற்கு கஷ்டமாக இருந்தது என சின்ன பொண்ணு தெரிவிக்கிறார். அதற்கு கமல் என்னை பொறுத்தவரை இரண்டுமே நாட்டுப்புற கலைகள் தான், நீங்கள் இருவரில் யார் வெற்றி பெற்றாலும் கலை வெற்றி பெறும் என கமல் கூறும் காட்சிகள் உள்ளது. இதேபோல கடந்த வாரம் முழுவதும் நடைபெற்ற விஷயங்கள் குறித்து கமல் விவாதிப்பார் என்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: