Bigg Boss Tamil 5: ஆரம்பிக்கலாமா? வெளியானது பிக் பாஸ் தமிழ் 5 ப்ரோமோ!

பிக் பாஸ் கமல்

டெனிம் பேண்ட், கறுப்பு சட்டை, மஸ்டர்ட் எல்லோ கோட் ஆகிய காஸ்ட்யூமில் தோன்றும் கமல், ஆரம்பிக்கலாமா எனக் கேட்கிறார்.

  • Share this:
    ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த பிக் பாஸ் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

    தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் முடிவடைந்தது. இதன் வெற்றியாளராக நடிகர் ஆரியை டைட்டிலை வென்றார். இதற்கிடையே கொரோனா தொற்று காரணமாக, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி சமீபத்தில் தான் முடிவடைந்தது.

    தற்போது, பிக் பாஸ் 5-ம் சீசனுக்கு ரசிகர்கள் தயாராகி வரும் நிலையில், இதனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். கடந்த வாரம் அதற்கான ப்ரோமோ படப்பிடிப்பு நடந்தது. இந்நிலையில் இப்போது பிக் பாஸ் தமிழ் 5-ன் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    டெனிம் பேண்ட், கறுப்பு சட்டை, மஸ்டர்ட் எல்லோ கோட் ஆகிய காஸ்ட்யூமில் தோன்றும் கமல், ஆரம்பிக்கலாமா எனக் கேட்கிறார். அதோடு பிக் பாஸ் தமிழ் 5 விரைவில் எனக் குறிப்பிடப்படுகிறது. கூடிய விரைவில் விரிவான ப்ரோமோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: