• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’எதிர்பாராததை எதிர் பாருங்கள்’ வெளியானது பிக் பாஸ் 5 புதிய ப்ரோமோ!

’எதிர்பாராததை எதிர் பாருங்கள்’ வெளியானது பிக் பாஸ் 5 புதிய ப்ரோமோ!

பிக் பாஸ் தமிழ் 5 ப்ரோமோ

பிக் பாஸ் தமிழ் 5 ப்ரோமோ

இந்த வருடம் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துக் கொள்வார்கள் என்ற விவாதம் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது.

  • Share this:
    விஜய் டிவி, புதிய பிக் பாஸ் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.

    தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் முடிவடைந்தது. இதன் வெற்றியாளராக நடிகர் ஆரியை டைட்டிலை வென்றார். இதற்கிடையே கொரோனா தொற்று காரணமாக, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி சமீபத்தில் தான் முடிவடைந்தது.

    தற்போது, பிக் பாஸ் 5-ம் சீசனுக்கு ரசிகர்கள் தயாராகி வரும் நிலையில், இதனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். கடந்த வாரம் அதற்கான ப்ரோமோ படப்பிடிப்பு நடந்தது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் பிக் பாஸ் தமிழ் 5-ன் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    டெனிம் பேண்ட், கறுப்பு சட்டை, மஸ்டர்ட் எல்லோ கோட் ஆகிய காஸ்ட்யூமில் தோன்றிய கமல், ஆரம்பிக்கலாமா எனக் கேட்கும்படி இருந்தது. இதைத் தவிர வேறெந்த தகவலும் அதில் இடம்பெறவில்லை. இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் விரிவான ப்ரோமோ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது பிக் பாஸ் 5-ன் புதிய ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. கல்யாண வீட்டில் நடக்கும் கலாட்டாக்களை மையப்படுத்தி இந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. பின்னர் பேசும் கமல், ”ஆயிரம் பொருத்தம் பார்த்து பண்ணும் கல்யாண வீட்லயே இவ்ளோ கலாட்டா இருக்கும் போது, வீடும் பெருசு, கலாட்டாவும் பெருசு. எதிர்பாராததை எதிர் பாருங்கள். பிக் பாஸ் தமிழ் சீசன் 5 விரைவில்” என்கிறார்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தவிர இந்த வருடம் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துக் கொள்வார்கள் என்ற விவாதம் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது. இருப்பினும் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கமல் ஹாசன் அறிமுகம் செய்யும் போது தான் இறுதி பட்டியல் தெரியவரும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: