• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக்பாஸில் பங்கேற்ற இசைவாணிக்கு வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸில் பங்கேற்ற இசைவாணிக்கு வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இசைவாணி

இசைவாணி

ஆண்கள் மட்டுமே பாடி வந்த கானாவை, முதல்முறை இசைக்கச்சேரியின் போது இளைஞர்கள் கேட்டு கொண்டதால் மேடையிலேயே முயற்சித்து நன்றாக பாடி அசத்தி கை தட்டல்களை அள்ளி இருக்கிறார்.

  • Share this:
    தமிழ் சின்னத்திரை ரசிகர்களை ஆர்வமுடன் டிவி முன் அமர வைக்கும் பிரமாண்ட ரியாலிட்டி ஷோவான பிக்பாஸின் 5-ஆம் சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

    கடந்த அக்டோபர் 3-ம் தேதி இசை வாணி, ராஜு, மதுமிதா, பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா, திருநங்கை நமிதா மாரிமுத்து, மலேசிய தமிழ் பெண் நாடியா சாங், விஜய் டிவி-யின் பிரபல ஆங்கர் பிரியங்கா தேஷ்பாண்டே, மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் - சாவித்திரி ஆகியோரது பேரன் அபிநய், அக்‌ஷரா, ஐசரி வருண், இமான் அண்ணாச்சி, தாமரைச் செல்வி, ஸ்ருதி, பாவனி ரெட்டி, நிரூப், ஐக்கி, சிபி, சின்னப்பொண்ணு உள்ளிட்ட 18 போட்டியாளர்களுடன் கோலாகலமாக துவங்கியது பிக்பாஸ் சீசன் 5.

    துவக்கத்தில் விறுவிறுப்பில்லாமல் சென்று கொண்டிருந்த இந்த சீசன் பின்னர் ஒருகட்டத்தில் களை கட்ட துவங்கியது. திடீரென்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நமிதா மாரிமுத்து, முதல் ஆளாக எலிமினேஷன் செய்யப்பட்ட நாடியா சாங், அபிஷேக் ராஜாவின் ஓவர் அலப்பறை என அடுத்தடுத்து பிக்பாஸில் விறுவிறுப்பு கூடியது. தொடர்ந்து பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா, சின்னபொண்ணு, சுருதி, மதுமிதா உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேற்றப்பட்டனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் தமிழகத்தின் கானா பெண் பாடகியான இசைவாணி பிக்பாஸ் சீசன் 5-லிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார். இவர் வட சென்னையான ராயபுரத்தை சேர்ந்தவர். சிறிய வயதில் இசை மீது பெரிதாக ஆர்வம் இல்லாவிட்டாலும், 7 வயதில் பாட துவங்கி உள்ளார் இசைவாணி. தந்தை கீ போர்ட் பிளேயர் என்பதால் அதன் பிறகு தந்தையுடன் சேர்ந்து பாடல் பாட மேடை ஏறி உள்ளார். கானா மீதான ஆர்வம் இவருக்கு 2010-ம் ஆண்டுக்கு பிறகு தான் வந்துள்ளது. ஆண்கள் மட்டுமே பாடி வந்த கானாவை, முதல்முறை இசைக்கச்சேரியின் போது இளைஞர்கள் கேட்டு கொண்டதால் மேடையிலேயே முயற்சித்து நன்றாக பாடி அசத்தி கை தட்டல்களை அள்ளி இருக்கிறார்.

    இதன் பிறகு தான் கானாவில் ஏன் கவனம் செலுத்த கூடாது என்று நினைத்து கானா ஸ்பெஷலிஸ்டாகி இருக்கிறார் இசைவாணி. தொடர்ந்து தனது கானா பாடல்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் இசைவாணி. இவர் பிக்பாஸ் டைட்டிலை நிச்சயம் கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 வாரங்கள் மட்டுமே தாக்கு பிடித்துள்ளார். தற்போது பிக்பாஸில் பங்கேற்றதற்காக இசைவாணிக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. வாரத்திற்கு ரூ.1 லட்சம் வீதம் தான் பங்கேற்ற 7 வாரங்களுக்கு மொத்தமாக ரூ.7 லட்சம் சம்பளம் பெற்றுள்ளார் இசைவாணி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: