முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஜய் டிவி தாமரை செல்விக்கு கொடுத்த சம்பளம் இவ்வளவு தான்! வெளியான ஷாக் தகவல்

விஜய் டிவி தாமரை செல்விக்கு கொடுத்த சம்பளம் இவ்வளவு தான்! வெளியான ஷாக் தகவல்

பிக் பாஸ் தாமரை

பிக் பாஸ் தாமரை

பிக்பாஸில் பங்கேற்ற தாமரை செல்விக்கு கொடுக்கப்பட்டு உள்ள சம்பளம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

  • Last Updated :

தமிழ் சின்னத்திரை ரசிகர்களை கவரும் வகையில் பல ரியாலிட்டி ஷோக்கள் தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகி வருகின்றன. இதனிடையே ரசிகர்களின் வரவேற்பு பெற்ற டிவி சேனலாக இருந்து வரும் பிரபல முன்னணி சேனலான ஸ்டார் விஜய் பல சுவாரசிய ஷோக்களை ஒளிபரப்பி தமிழ் மக்களை உற்சாகப்படுத்தி வருகிறது. ஒருபக்கம் பல சூப்பர் ஹிட் சீரியல்களை டெலிகாஸ்ட் செய்து ரசிகர்களை மகிழ்விக்கும் அதே நேரத்தில், மறுபக்கம் கலகலப்பான ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது.

ஸ்டார் விஜய் டிவி-யில் டான்ஸ் ரியாலிட்டி ஷோ, காமெடி ரியாலிட்டி ஷோ என வித விதமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் ஷோக்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் ஆகிய இரண்டும் தான். குக் வித் கோமாளி சீசன் 3 விரைவில் தொடங்க உள்ள நிலையில் உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிரமாண்ட ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. கடந்த வருடம் அதாவது 2021 அக்டோபர் 3-ம் தேதி மொத்தமாக 18 போட்டியாளர்களுடன் கோலாகலமாக துவங்கியது பிக்பாஸ் சீசன் 5.

இதையும் படிங்க.. பிக் பாஸ் வீட்டை ராஜு படமாக எடுத்தால் அதில் சிபி தான் ஹீரோ... ஆனால் ஹீரோயின்?

தமிழ் சின்னத்திரையிலேயே பிரமாண்ட ரியாலிட்டி ஷோவாக கருதப்படும் பிக்பாஸ் சீசன் 5-ல் யாரெல்லாம் பங்கேற்க போகிறார்கள் என்று ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் , சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 பேர் பங்கேற்றது ஆர்வத்தை அதிகப்படுத்தியது. எனினும் கடந்த சீசன்களை போல பிக்பாஸ் துவக்கத்திலேயே சரியாக களை கட்டவில்லை.

இதையும் படிங்க.. கணேசனை புரிந்து கொண்ட சொர்ணம்.. பாவம் கணேசன் சீரியல் ஆடியன்ஸ் செம்ம ஹாப்பி!

வழக்கம் போல போட்டியாளர்களுக்குள் ஏற்பட்ட பல பஞ்சாயத்துக்கள் ஒருகட்டத்தில் பிக்பாஸ் சீசன் 5-ஐ சுவாரஸ்யமாக்கியது. இதனிடையே ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர்கள் வீதம் வெளியேற்றப்பட்ட நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து கடந்த வாரம் மேடை நாடக கலைஞரான தாமரை செல்வி வெளியேற்றப்பட்டார். சுமார் 98 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்த தாமரை பிக்பாஸை விட்டு வெளியேறியது அவரது ஆதரவாளர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனிடையே பிக்பாஸில் பங்கேற்ற தாமரை செல்விக்கு கொடுக்கப்பட்டு உள்ள சம்பளம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. தகவலின் படி வாரத்திற்கு ரூ.70 ஆயிரம் என தாமரைக்கு சம்பளம் பேசப்பட்டு உள்ளது. இதன்படி சுமார் 14 வாரங்கள் போட்டியில் நிலைத்த தாமரைக்கு ரூ.9,80,000 சம்பளம் வந்துள்ளதாவும், இந்த சம்பளத்தில் 30% வரி பிடித்தம் செய்யப்பட்டு மீதி பணம் அவருக்கு கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறன. இதற்கு பேசாமல் தாமரை அந்த ரூ.12 லட்சம் அடங்கிய பெட்டியை எடுத்து கொண்டு பிக்பாஸை விட்டு வெளியேறி இருக்கலாமே என்று அவரது ஆதரவாளர்கள் சோஷியல் மீடியாக்களில் கூறி வருகின்றனர்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv