முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இன்னும் ஒரே வாரம் தான் இருக்கு... பிக் பாஸில் கலந்துக்கொள்ளும் பிரபலங்கள் யார் தெரியுமா?

இன்னும் ஒரே வாரம் தான் இருக்கு... பிக் பாஸில் கலந்துக்கொள்ளும் பிரபலங்கள் யார் தெரியுமா?

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் பிரபலங்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் பிரபலங்கள் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் முடிவடைந்தது. இதன் வெற்றியாளராக நடிகர் ஆரி டைட்டிலை வென்றார். இதற்கிடையே கொரோனா தொற்று காரணமாக, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி சமீபத்தில் தான் முடிவடைந்தது.

வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் பிக் பாஸ் கடந்த 2020 முதல் தாமதமாக ஒளிபரப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டின் பிக் பாஸ் 5 வரும் அக்டோபர் 3-ம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது. இதற்கான ப்ரோமோக்கள் வெளியாகி, ரசிகளிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதையடுத்து பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் பிரபலங்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் விஜய் டிவி பிரியங்கா, நடிகை கெளசல்யா, ஷகீலா மகள் மிலா, குக் வித் கோமாளி கனி, நிழல்கள் ரவி, நடிகை ப்ரியா ராமன் ஆகிய திரை பிரபலங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.

' isDesktop="true" id="570801" youtubeid="HXLJACyFd0U" category="television">

இருப்பினும் இன்னும் ஒரு வாரத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ விடைகள் தெரிந்துவிடும்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5