Bigg Boss Aajeedh: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிக் பாஸ் ஆஜித்

ஆஜித்

இந்த வார தொடக்கத்தில் கோவிட்டுக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமல் நான் நேர்மறையாக சோதிக்கப்பட்டேன்.

  • Share this:
    பின்னணி பாடகரும், பிக் பாஸ் 4 போட்டியாளருமான ஆஜித் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    பின்னணி பாடகரும், பிக் பாஸ் தமிழ் போட்டியாளருமான அஜீத் காலிக், கொரோனா வைரஸ் தொற்றுக்கு நேர்மறையாக பரிசோதித்துள்ளார். அவரது இணை போட்டியாளரான கேப்ரியெல்லா சார்ல்டன் சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

    தான் அறிகுறியற்றவர் என்பதைத் தெரிவித்த அஜீத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "இந்த வார தொடக்கத்தில் கோவிட்டுக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமல் நான் நேர்மறையாக சோதிக்கப்பட்டேன். பிரார்த்தனைகளால் என் உடல்நலம் நன்றாக இருக்கிறது. தயவுசெய்து நீங்கள் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றவும். உங்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் பாதுகாப்பாக இருங்கள். இந்த உலகம் விரைவில் இயல்பு நிலைக்கு வர வேண்டும் என்று நம்புகிறோம், பிரார்த்தனை செய்வோம்!" என்று தெரிவித்திருந்தார். அஜீத்தின் இணை போட்டியாளரான கேப்ரியெல்லாவும் சமீபத்தில் தனது உடல்நிலை குறித்த செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    ”தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டேன், இந்த வார தொடக்கத்தில் கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்துள்ளேன். உங்கள் அன்பிற்கு நன்றி. நான் நன்றாக இருக்கிறேன். தயவுசெய்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்" என கேப்ரியல்லா தெரிவித்திருந்தார்.

    கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவான, பிக் பாஸ் தமிழின் நான்காவது சீசனில் அஜீத்தும் கேப்ரியெல்லாவும் ஒன்றாக கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: