ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸ் வீட்டில் இனி யாரும் பேசியே விபூதி அடிக்க முடியாது.. ரெய்டு விடும் கமல்ஹாசன்!

பிக் பாஸ் வீட்டில் இனி யாரும் பேசியே விபூதி அடிக்க முடியாது.. ரெய்டு விடும் கமல்ஹாசன்!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

பஞ்சந்திரம் டாஸ்க் மூலம் ஆற்றல் கிடைத்து இருப்பதால் வெளியேற்றத்தில் மாற்றங்களும் நிகழலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பிக் பாஸ் சீசன் 5ல் இன்றைய எபிசோடில் என்ன நடக்க போகிறது என்பதை புரமோ மூலம் கமல்ஹாசன் ஹிண்ட் கொடுத்துள்ளார்.

விஜய் டிவி-யில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் கடந்த சில எபிசோட்களாக சூடுபிடிக்க துவங்கி இருக்கிறது. 4 சீசன்களும் ரசிகர்களை பெரிதாக கவர்ந்த நிலையில் இந்த சீசன் மொத்தம் 18 போட்டியாளர்களுடன் துவங்கியது. இசை வாணி, ராஜு, மதுமிதா, யூடியூபர் அபிஷேக் ராஜா, திருநங்கை நமிதா மாரிமுத்து, நாடியா சாங், விஜய் டிவி-யின் பிரபல ஆங்கர் பிரியங்கா தேஷ்பாண்டே, மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் அபிநய், அக்‌ஷரா, ஐசரி வருண், இமான் அண்ணாச்சி, தாமரைச் செல்வி, ஸ்ருதி, பாவனி ரெட்டி, நிரூப், ஐக்கி, சிபி, சின்னப்பொண்ணு உள்ளிட்டோருடன் பிக்பாஸ் சீசன் 5 ஆரம்பமானது.

இதில் எலிமினேஷன் நடைமுறைகள் துவங்குவதற்கு முன்பாகவே போட்டியில் பங்கேற்று இருந்த நமீதா மாரிமுத்து வெளியேறினார் இதற்கான உண்மையான காரணம் என்னவென்பது இதுவரை தெரியவில்லை. தொடர்ந்து 17 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் சீசன் 5 தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கடந்த வாரம் மலேசிய தமிழரான நாடியா சாங் போட்டியை விட்டு வெளியேறினார்.

மலேசியாவில் சீரியல் மற்றும் மாடலிங்கில் பிஸியாக இருந்து வரும் நாடியா சாங் பிக்பாஸில் பங்கேற்று இருந்தார். இவர் போட்டியில் கொடுக்கப்படும் டாஸ்க்குகளுக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை, எவிக்ஷன் பட்டியலில் பலர் இருந்த நிலையில் மக்களின் ஓட்டுகள் அடிப்படையில் ஐக்கி மற்றும் நாடியா சாங் ஆகியோர் வெளியேற்றப்படுவதற்கான லிஸ்ட்டில் அடுத்தடுத்து இருந்ததாக தெரிகிறது.

நாடியாவின் வெளியேற்றத்திற்கு பிறகு பிக் பாஸ் வீட்டில் பல மாற்றங்கள் அரங்கேறின. பிரியங்கா அன்பு கேங்கில் மாட்டி தவிக்கிறார். அபிஷேக் ராஜா பேசியே மொத்த காரியத்தையும் செய்து முடிக்கிறார். இசை, ஸ்ருதி, ஐக்கி போன்றோர் எங்களையும் விளையாட விடுங்கன்னு கெஞ்சி வருகிறார்கள். அபிநவ், சிபி, சின்ன பொண்ணு ஆகியோர் இருக்குற இடம் தெரியாமல் சுற்றி வருகிறார்கள். இப்படியாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் 5ல், இரண்டாவது எவிக்‌ஷன் வரும் ஞாயிற்றுக்கிழமை அரங்கேறவுள்ளது.

பிரபல ஷோவுக்கு எண்டு கார்டு போட்ட விஜய் டிவி.. சோகத்தில் ரசிகர்கள்!

இதில் பாவனி, இசை, சின்ன பொண்ணு, தாமரை செல்வி, பிரியங்கா, அக்‌ஷரா, அபிஷேக், ஐக்கி பெர்ரி ஆகியோர் உள்ளனர். இதில் சிலருக்கு பஞ்சந்திரம் டாஸ்க் மூலம் ஆற்றல் கிடைத்து இருப்பதால் அவர்கள் வெளியேற்றத்தில் மாற்றங்களும் நிகழலாம். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. வழக்கம் போல் கமல்ஹாசன் ஹிண்ட் கொடுத்தே ரசிகர்களை கவர்கிறார். வாத்தி ரெய்டு விடுவது போல் இனிமே பிக் பாஸ் வீட்டுக்குள் மாத்தி மாத்தி பேசி யாரும் ஏமாற்ற முடியாது என்கிறார். அதே போல் இன்று போட்டியாளர்களுடன் நிறைய பஞ்சாயத்து இருப்பதாகவும் கூறுகிறார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bigg Boss Tamil 5