• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் குக் வித் கோமாளி 3 - எப்போது தொடங்குகிறது தெரியுமா?

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் குக் வித் கோமாளி 3 - எப்போது தொடங்குகிறது தெரியுமா?

குக் வித் கோமாளி 3

குக் வித் கோமாளி 3

போட்டியாளர்கள் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், பார்வையாளர்களை கவரும் வகையில் பிரபலங்களும் இருப்பார்கள் எனத் தெரிகிறது.

  • Share this:
    குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சி குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமையல், காமெடி இரண்டையும் கலந்து செய்த கலவையான இது பலரையும் வாய் விட்டு சிரிக்க வைத்தது.

    முதல் சீசனின் டைட்டிலை பிக் பாஸ் வனிதா விஜயகுமார் வென்றார். அதில் ரன்னராக ரம்யா பாண்டியன் இடம் பிடித்தார். இதனையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசனின் வெற்றியாளராக கனி அறிவிக்கப்பட்டார்.

    இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து டிசம்பர் மாதம், 2-ம் வாரத்தில் குக் வித் கோமாளி 3-ம் சீசன் தொடங்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    போட்டியாளர்கள் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், பார்வையாளர்களை கவரும் வகையில் பிரபலங்களும் இருப்பார்கள் எனத் தெரிகிறது. தவிர விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில், மற்ற சீசன்களைப் போல விறுவிறுப்பாக இல்லை என்கிறார்கள் ரசிகர்கள். இந்த முறை பிக் பாஸ் கைக்கொடுக்காத நிலையில், குக் வித் கோமாளி 3-ஐ சேனல் தரப்பு கையிலெடுப்பதாக தெரிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: