சீரியல்கள் ஹிட்டடிக்க சரியான ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியம் வில்லன் அல்லது வில்லி பாத்திரங்கள். சூப்பர் ஹிட்டாகும் எல்லா சீரியல்களிலும் வில்லி பாத்திரங்கள் மற்றும் அதில் நடிக்கும் நடிகைகள் சிறப்பாக நடித்திருப்பார்கள். அந்த வகையில், விஜய் டிவியின் மிகப்பெரிய ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மாவின் வில்லி வெண்பா, வேறு சேனலுக்கு செல்லப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
வெண்பா சீரியலை விட்டு விலகுவதாக இதற்கு முன்பு பல முறை கூறப்பட்டன. ஆனால், குழந்தை பிறந்த பிறகும், ஃபரினா நடிப்பதற்கு திரும்பிவிட்டார். இந்த முறை வெளியான செய்தி உண்மையா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஏற்கனவே, சீரியலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி ஹரிப்ரியன் சீரியலை விட்டு வெளியேறியதால், டிஆர்பி குறைந்தது. ஆனால், அவர் போன அதே நேரத்தில் தான் நிஜ வாழ்வில் கர்ப்பமாக இருந்த நடிகை ஃபரினா பிரசவத்திற்காக விடுப்பு எடுத்துக் கொண்டு சென்றார். ரோஷினி மற்றும் ஃபரினா இல்லாமல் சில நாட்கள் பாரதி கண்ணம்மா சீரியலை பலரும் பார்க்கவில்லை. குழந்தை பிறப்பதற்கு சில நாட்கள் முன்பு வரை ஷூட்டிங்கில் கலந்து கொண்டார் ஃபரினா. இதனால், சின்னத்திரை வட்டாரத்தில் மட்டுமல்லாமல், ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டைப் பெற்றார்.
அதே போல, ஆண் குழந்தைப் பிறந்த சில வாரங்களுக்குப் பின், உடனடியாக பாரதி கண்ணம்மா சீரியலுக்கு மீண்டும் திரும்பி நடிக்கத் தொடங்கினார் ஃபரினா. இவர் பிரசவத்திற்கு சென்ற போது கூட, இனி வில்லி ரோலில் வெண்பாவாக ஃபரினா நடிக்க மாட்டார். ரோஷினிக்கு பதில் வேறு நடிகையை மாற்றியதைப் போல இவருக்கு பதிலாகவும் வேறு நடிகை வில்லி வேடத்தில் நடிக்க வருவார் என்றெல்லாம் தகவல் வெளியானது.
சின்னத்திரையில் முதன் முதலாக குக்கிங் ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, படிப்படியாக வளர்ந்து சீரியலில் நடிக்கத் தொடங்கியவர் நடிகை ஃபரீனா. இவர் நிஜ வாழ்வில் கர்ப்பிணியாக இருந்ததால் ஜெயிலுக்கு போவது போல காட்சிகள் காட்டப்பட்டது.
பாரதி கண்ணம்மா டாப் கியரில் பயணிக்கும் நேரத்தில், தற்போது இவர் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒரு சீரியலில் நடிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இவர் தற்போது கலர்ஸ் தமிழ் சேனலின் அபி டைலர் சீரியலில் நடிக்க இருப்பதால், பாரதி கண்ணம்மாவில் இருந்து வெளியேறி விடுவாரா என்பதுத் தெரியவில்லை.
மோடியை விமர்சித்த தனியார் தொலைக்காட்சி பொது மன்னிப்பு கோர வேண்டும் - பாஜக வலியுறுத்தல்
நடிகை ஃபரினா கலர் தமிழ் ரசிகர்களுக்கு புதியவர் அல்ல. இவர் ஏற்கனவே கலர் தமிழில் வெளியான தறி என்ற
சீரியலில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அபி டைலரில் இவருடைய பாத்திரத்தின் முக்கியத்துவம் என்ன மற்றும் பாரதி கண்ணம்மாவில் இருந்து விளகுகிறாரா என்பது பற்றி விரைவில் தெரிந்து கொள்ளலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.