ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாரதி கண்ணம்மாவில் இன்னொரு பெரிய ட்விஸ்ட்... வெண்பாவே கொடுத்த ஹின்ட்!

பாரதி கண்ணம்மாவில் இன்னொரு பெரிய ட்விஸ்ட்... வெண்பாவே கொடுத்த ஹின்ட்!

பாரதி கண்ணம்மா சீரியல்

பாரதி கண்ணம்மா சீரியல்

Bharathi kannamma Serial : நடிகை ரேகாவின் வருகையால் பாரதி கண்ணம்மா சீரியல் லேசாக சூடுபிடித்துள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

கடந்த பல வாரங்களாக "யப்பா சாமி... போதும் டா.. இதுக்கு மேல உங்க இழுவையை தாங்க முடியாது" என்கிற அளவிற்கு ரசிகர்களின் பொறுமையை சோதித்து வந்த பாரதி கண்ணம்மா சீரியலின் கடைசி சில எபிசோட்கள், கொஞ்சம் வித்தியாசமான ட்ராக்கிற்கு திரும்பி உள்ளது போல் தெரிகிறது.

உடனே "ஜவ்வு போல் இழுத்தடிக்கும்" கதையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதா? என்று கேட்காதீர்கள். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை! வேறு என்ன செய்துள்ளார்கள் என்று பார்த்தால் - சீரியலில் புதிய கேரக்டர் ஒன்றை கொண்டு வந்துள்ளார்கள். பிரபல சினிமா நடிகை ரேகா, பாரதி கண்ணம்மா சீரியலின் வில்லியான வெண்பாவின் அம்மாவாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளார்!

நடிகை ரேகா ஏன் விஜய் டிவி சீரியலுக்கு வர வேண்டும் என்கிற கேள்வியோ, குழப்பமோ யாருக்குமே ஏற்படாது. ஏனெனில் நடிகை ரேகா விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக்கு வித் கோமாளியில் கலந்து கொண்டு அசத்தினார் என்பது நம் அனைவருக்குமே தெரியும். "ஷோவில் கலந்து கொண்டால் சீரியலில் வாய்ப்பு, ஒருவேளை சீரியலில் நடித்தால் ஷோவில் கலந்து கொள்ள வாய்ப்பு" என்கிற விஜய் டிவியின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகவே நடிகை ரேகா பாரதி கண்ணம்மா சீரியலில் அறிமுகமாகி உள்ளார், சீரியலில் ரேகா கதாபாத்திரத்தின் பெயர் ஷர்மிளா ஆகும்!

also read : முதுகில் இவ்ளோ பெரிய டாட்டூவா! வைரலாகும் திவ்ய பாரதியின் லேட்டஸ்ட் போட்டோஸ்

ஆனால், மிகவும் வெள்ளந்தியான மற்றும் மிடுக்கான கதாபாத்திரங்களில் நடித்து நம் இதயங்களை கொள்ளைகொண்ட ரேகாவை ஒரு வில்லியாக காட்சிப்படுத்தி இருப்பதெல்லாம் அவரின் தீவிர ரசிகர்களுக்கான "நேரக்கொடுமை" என்றே கூற வேண்டும்! நல்லவேளை, அறிமுகத்தின் போது பாதி முகம் மறையும்படியான கண் கண்ணாடியை போட்டுகொண்டு வில்லத்தனமாக பேசி நடித்துள்ளார் ரேகா, கண்களை காட்டி நடித்து இருந்தால் கதையே வேறு; அநேகமாக இது ஏதாவது ஒரு அசிஸ்டென்ட் டைரக்டரின் ஐடியாவாகத்தான் இருக்கும் - குட் ஜாப்!

also read : அஜித்தின் 2 புதிய படங்களிலும் நடிக்கும் பிக்பாஸ் கவின்?

"குக்கு வித் கோமாளி ஷோவில், நடிகை ரேகா அவ்வப்போது கொஞ்சம் டென்ஷன் ஆனது என்னவோ உண்மை தான் அதற்காக வில்லி ரோல்-ஆ கொடுப்பீங்க?" என்று சில ரசிகர்கள் கொந்தளிக்க, மறுகையில் சிலர் ரேகாவின் இந்த அறிமுகத்தை கதையில் சுவாரசியம் கூட்டும் ஒரு முயற்சியாகவே பார்க்கிறார்கள்.

ஷர்மிளா (அதாவது ரேகா) யார்? என்பதை ரசிகர்களுக்கு சொல்ல 3 அல்லது 4 எபிசோட்களை ஓட்டமால், உடனே அவர் வெண்பாவின் அம்மா என்கிற உண்மையை சொன்னதற்காக இயக்குனருக்கு நன்றிகள் கோடி; இல்லையென்றால் கொஞ்ச நஞ்ச சுவாரசியமும் படுத்து தூங்கி இருக்கும்!

also read : மினி ரெட் ட்ரெஸில் கலக்கும் வலிமை பட நடிகை ஹூமா குரேஷி..

புதிய கதாபாத்திரத்தின் அறிமுகத்தால், இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் நடிகை ரேகாவின் வருகையால் பாரதி கண்ணம்மா சீரியல் லேசாக சூடுபிடித்துள்ளது. இதற்கிடையில் சீரியலில் வெண்பாவாக நடிக்கும் ஃபரினா ஆசாத், ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வழியாக "இன்னொரு ட்விஸ்ட் காத்திருக்கிறது. தொடர்ந்து பாருங்கள்" என்று கூறி உள்ளார்.

அது என்னவாக இருக்கும்? ஒருவேளை ஷர்மிளா, பாரதியை தொடர்ந்து கண்ணம்மாவையும் சந்தித்து பேசுவாரோ? அல்லது சீரியலில் நடிக்கும் மற்றொரு சீனியர் ஆர்டிஸிட் ஆன சௌந்தர்யா கதாபாத்திரத்துடன் ஒரு நேரடி சந்திப்பை நடத்துவாரோ? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

First published:

Tags: Bharathi Kannama, Vijay tv