Bharathi Kannamma: பாரதியை அமெரிக்கா போகாமல் தடுக்கும் கண்ணம்மா... உண்மை தெரியப் போகிறதா?

பாரதி கண்ணம்மா

கண்ணம்மா அந்த வழியாக நடந்து வர, 'என்னையும் ஹேமாவையும் பிரிக்க நீ திட்டம் போட்டது இனி நடக்காது. நாளைக்கு காலைல 9.45-க்கு எனக்கும் ஹேமாவுக்கும் ஃப்ளைட்' என்கிறான் பாரதி.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

    கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறான் பாரதி. அவர்கள் வாழ்க்கையில் விளையாடி இருவரையும் பிரித்து விடுகிறாள் வெண்பா. கண்ணம்மாவுக்கு பிறந்த இரட்டை குழந்தையில் கறுப்பாக பிரந்த ஹேமாவை மாமியார் செளந்தர்யா தூக்கிச் சென்று வளர்த்து வருகிறார். இன்னொரு குழந்தை லட்சுமி கண்ணம்மாவிடம் வளர்கிறது. தன் மகள் என்று தெரியாமலேயே ஹேமா மீது உயிராக இருக்கிறான் பாரதி. தன் பள்ளியில் சமையல் செய்யும் கண்ணம்மா தனது அம்மா தான் எனத் தெரியாமலேயே அவளிடம் அன்பாக இருக்கிறாள் ஹேமா.

    கண்ணம்மாவும் ஹேமாவும் நெருக்கமாக இருப்பதைப் பார்த்த பாரதி, அவளை பள்ளியில் இருந்து நிறுத்தி, அமெரிக்கா அழைத்துச் செல்லவிருக்கிறான். இதற்கிடையே ஹேமாவை பார்க்க வருகிறாள் லட்சுமி. தனது சகோதரி தான் ஹேமா என்ற உண்மை அவளுக்கு தெரியாது. பிறகு அங்கிருந்து கிளம்ப முயல்கையில், நானே உன்னை வீட்டில் விடுகிறேன் என லட்சுமியை அழைத்துச் செல்கிறான் பாரதி. பாரதிக்கு உண்மை தெரிந்தால் என்ன ஆகுமோ என சௌந்தர்யா பயப்படுகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கண்ணம்மா வீட்டின் அருகில் இருக்கும் சுமதிக்கு போன் செய்கிறார் அவர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. காரில் செல்லும்போது லட்சுமியிடம் பாரதி 'உங்க அம்மாவை பாக்கவே முடியலையே' என கேட்க, என்ன சொல்வது என தெரியாமல் முழிக்கிறாள் லட்சுமி.



    அந்த நேரம் பார்த்து கார் பிரேக் டவுனாகி விட, நான் நடந்தே போகிறேன் என்கிறாள் லட்சுமி. ஆனால் பாரதி விடுவதாய் இல்லை. அந்த நேரம் பார்த்து ஆட்டோக்காரர் குமார் அங்கு வர, அதில் ஏறி கொள்கிறாள் லட்சுமி. அந்த நேரம் கண்ணம்மா அந்த வழியாக நடந்து வர, 'என்னையும் ஹேமாவையும் பிரிக்க நீ திட்டம் போட்டது இனி நடக்காது. நாளைக்கு காலைல 9.45-க்கு எனக்கும் ஹேமாவுக்கும் ஃப்ளைட். இனி உன் முகத்தை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவுக்கு 1947-ல் சுதந்திரம் கிடைச்சது, எனக்கு நாளைக்கு காலைல தான் சுதந்திரம் கிடைக்கப் போகுது. இனி நீ யாரோ நான் யாரோ' என்கிறான் பாரதி.

    ’இதெல்லாம் ஏன் என் கிட்ட சொல்றீங்க. ஏற்கனவே நாம அப்படித்தான இருக்கோம். ஆல் த பெஸ்ட்’ என்றவாரு அங்கிருந்து கிளம்புகிறாள் கண்ணம்மா. வீட்டுக்கு சென்ற பாரதி நடந்ததை கூறியதும், அவன் கண்ணம்மா வீட்டுக்கு செல்லவில்லை என்பதை அறிந்து பெருமூச்சு விடுகிறார் செளந்தர்யா. அந்த நேரம் ஹேமா காய்ச்சலில் துடிக்கிறாள். 102 டிகிரியா என அதிர்ச்சியாகிறான் பாரதி.

    இதற்கிடையே பாரதியும், ஹேமாவும் இங்கிருப்பது தான் நல்லது. அதனால் அவரை எப்படியாவது தடுத்து நிறுத்தனும் என கண்ணம்மா நினைக்கும்படி விஜய் டிவி வெளியிட்ட ப்ரோமோவில் காட்டப்பட்டிருந்தது. விரைவில் பாரதியும் கண்ணம்மாவும் இணைவார்களா? பொருத்திருந்து பார்ப்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: