பாரதி கண்ணம்மா படப்பிடிப்பு தள காட்சிகள் - அடுத்து நடக்கப்போவது என்ன?

பாரதி கண்ணம்மா

காலப்போக்கில் வளரும் இரண்டு பெண் குழந்தைகளும் ஒரே பள்ளியில் படிக்கும்போது நெருங்கிய தோழிகளாக மாறுகின்றனர்.

 • Share this:
  விஜய் டிவியில் டாப் சீரியலாக இருக்கும் பாரதி கண்ணம்மாவில், இந்த வாரத்தில் மட்டுமே ஏகப்பட்ட ட்விஸ்டுகள். கணவன் மனைவியான பாரதி, கண்ணம்மா கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.

  இதற்கு முக்கிய காரணமாக இருப்பது இந்த சீரியலின் வில்லி வெண்பா. வெண்பா, பாரதியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு கண்ணம்மா மீது அவதூறு பரப்பினார். இதனை நம்பிய பாரதி, கண்ணம்மாவை கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் சந்தேகப்பட்டு அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார்.

  கர்ப்பிணியான கண்ணம்மா, தனியாக வாழ்ந்து இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுக்கிறாள். இதனையறிந்து கொண்ட கண்ணம்மாவின் மாமியார் சௌந்தர்யா, மருத்துவமனைக்கு சென்று ஒரு குழந்தையை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறாள். கண்ணம்மா, தான் பெற்றெடுத்தது ஒரே பெண் குழந்தை என நினைத்து லட்சுமி என பெயர்சூட்டி வளர்க்கிறாள்.

  சௌந்தர்யா ஒரு குழந்தையை தத்தெடுத்து வந்ததாக பாரதியிடம் கூறிவிட்டு அதற்கு ’ஹேமா’ என பெயர் சூட்டி வளர்க்கிறார். ஹேமாவும் பாரதியை தன்னுடைய அப்பா என நினைத்து வளரும் நிலையில், தன்னுடைய அம்மா யார் என்ற விவரம் தெரியாது. அதேநேரத்தில் பாரதிக்கும் ஹேமா தன்னுடைய குழந்தை என தெரியாது. கண்ணம்மாவுக்கும் பாரதி வீட்டில் வளரும் குழந்தை தனது மகள் என தெரியாது.

  காலப்போக்கில் வளரும் இரண்டு பெண் குழந்தைகளும் ஒரே பள்ளியில் படிக்கும்போது நெருங்கிய தோழிகளாக மாறுகின்றனர். ஒரு கட்டத்தில் ஹேமாவுக்கு கண்ணம்மா மீது அலாதி பிரியம் ஏற்படுகிறது. இதனிடையே இவ்வளவு நாட்களாக கண்ணம்மாவின் குழந்தை லட்சுமி என தெரியாத இருந்த பாரதிக்கு, இப்போது அது தெரிய வருகிறது. இதுகுறித்து கண்ணம்மாவிடம், பாரதி கோபமாக கேள்வி எழுப்ப கண்ணம்மாவும் லட்சுமி என் மகள் தான் என்ற உண்மையை கூறிவிடுகிறார். இதனால் கண்ணம்மாவை முன்பை விட மீண்டும் வெறுக்கிறான்.

  இதற்கு இடையில் கண்ணம்மாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த தகவலை கூறி விடுகிறார். இதனை கேட்ட கண்ணம்மா அதிர்ச்சியடைகிறார். மேலும் சௌந்தர்யாவிடம் வளரும் ஹேமா தான் தன்னுடைய இன்னொரு மகள் என்ற சந்தேகம் கண்ணம்மாவிற்கு எழுகிறது. இதுகுறித்து சௌந்தர்யாவிடம் அதிரடியாக கேள்வி எழுப்பும் கண்ணம்மா, எனக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்ததாக கூறுகிறார், நீங்கள் தத்தெடுத்து வளர்க்கும் ஹேமா யார்? அவளை பார்க்க நான் சிறுவயதில் இருந்ததை போலவே இருக்கிறாள், என் மீது மிகவும் பாசமாகவும் இருக்கிறாள். என் குழந்தை தானே அது? என சராமரியாக கேள்வி எழுப்பிகிறார்.   
  View this post on Instagram

   

  A post shared by Tamil Serials (@tamilserialexpress)


  இதனை கேட்ட சௌந்தர்யா, கண்ணம்மாவிற்கு உண்மை தெரிந்து குறித்து அதிர்ச்சியடைந்தவாறு இருக்கிறார். எனினும் அதனை வெளியில் கட்டிக்கொள்ளாமல் ஹேமாவை தத்தெடுத்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கூறுகிறார். இதனால் கண்ணம்மா குழப்பமான நிலையில் இருப்பதால் இதுகுறித்து அவருக்கு பிரசவம் பார்த்த நர்ஸ் துளசியிடம் சென்று கேட்கிறார். இதனை மறைந்து இருந்து கேட்கும் வெண்பா ஹேமா, கண்ணாவின் குழந்தை தான் என்பதை உறுதி செய்கிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதற்கு பின்னர் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கண்ணம்மாவும், பாரதியும் பேசி கொண்டிருக்கும் காட்சிகள் உள்ளது. முன்னதாக அதே பகுதியில் வெண்பாவிடம், கண்ணம்மா கெஞ்சுவது போல காட்சிகள் வெளியானது. வெண்பாவிற்கு ஹேமா, கண்ணம்மாவின் குழந்தை என தெரிந்ததை வைத்து அவரை மிரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வீடியோக்களை பார்த்த பார்த்த ரசிகர்கள், என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: