Home /News /entertainment /

இரட்டை குழந்தை பற்றிய உண்மையை தெரிந்துக் கொண்ட கண்ணம்மா - அடுத்து நடப்பதென்ன?

இரட்டை குழந்தை பற்றிய உண்மையை தெரிந்துக் கொண்ட கண்ணம்மா - அடுத்து நடப்பதென்ன?

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனைக்கு செல்லும், கண்ணம்மாவிடம், உனக்கு பிறந்தது இரட்டை குழந்தைகள் என சொல்கிறார் மருத்துவர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பாரதி கண்ணம்மா சீரியலில், தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த விஷயம் கண்ணம்மாவுக்கு தெரிய வந்துள்ளது.

    கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறான் பாரதி. அவர்கள் வாழ்க்கையில் விளையாடி இருவரையும் பிரித்து விடுகிறாள் வெண்பா. கண்ணம்மாவுக்கு பிறந்த இரட்டை குழந்தையில் கறுப்பாக பிரந்த ஹேமாவை மாமியார் செளந்தர்யா தூக்கிச் சென்று வளர்த்து வருகிறார். இன்னொரு குழந்தை லட்சுமி கண்ணம்மாவிடம் வளர்கிறது. தன் மகள் என்று தெரியாமலேயே ஹேமா மீது உயிராக இருக்கிறான் பாரதி. தன் பள்ளியில் சமையல் செய்யும் கண்ணம்மா தனது அம்மா தான் எனத் தெரியாமலேயே அவளிடம் அன்பாக இருக்கிறாள் ஹேமா.



    இந்நிலையில் தனக்கு இரட்டை குழந்தை பிறந்தது தற்போது கண்ணம்மாவுக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ப்ரோமோவில், ”உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனைக்கு செல்லும், கண்ணம்மாவிடம், உனக்கு பிறந்தது இரட்டை குழந்தைகள், நான் தான் உன்னோட ஸ்கேன் ரிப்போர்ட்ட பாத்தது நான் தான். உன் வயித்துல வளந்தது ரெட்ட குழந்தைங்க” என்று மருத்துவர் அழுத்தமாக கூறுகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதைகேட்ட கண்ணம்மா, கோபத்துடன் அவளது அத்தை செளந்தர்யாவுக்கு ஃபோன் செய்து, ‘நான் கேக்குற கேள்விக்கு உண்மையை மட்டும் தான் சொல்லணும். எனக்கு ரெட்டை குழந்தை பொறந்துச்சா’ என்கிறாள்.

    இதனால் அடுத்து வரும் நாட்களில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் விறுவிறுப்பாகும் எனத் தெரிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: TV Serial

    அடுத்த செய்தி