Bharathi Kannamma: கண்ணம்மாவை மேடைக்கு அழைத்த பாரதி! உண்மை தெரிய வருமா?

Bharathi Kannamma: கண்ணம்மாவை மேடைக்கு அழைத்த பாரதி! உண்மை தெரிய வருமா?

பாரதி கண்ணம்மா சீரியல்

அது நம்முடைய இன்னொரு பேத்தி என செளந்தர்யாவுக்கு தெரிய வருகிறது.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில், பாரதியும் கண்ணம்மாவும் எப்போது ஒன்று சேருவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    வெண்பாவின் சூழ்ச்சியால் பாரதியும், கர்ப்பமாக இருந்த கண்ணம்மாவும் பிரிந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதற்கிடையே தனக்கு இரட்டை குழந்தை பிறந்த விபரம், மயக்கத்தில் இருந்த கண்ணம்மாவுக்கு தெரியாது. அதனால் கறுப்பாக பிறந்த குழந்தையை மாமியார் செளந்தர்யா, தூக்கிச் சென்று வளர்த்து வருகிறார். தன் மீது பாசமாக இருக்கும் ஹேமா, தனக்கு பிறந்த குழந்தை தான் என பாரதிக்கு இன்னும் தெரியாது.

    ஒன்று கூடிய பிக் பாஸ் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள்! என்ன விஷயம் தெரியுமா?

    ஹேமா படிக்கும் பள்ளியில் சமையல் செய்து தருபவராக வேலை செய்கிறாள் கண்ணாம்மா. சமையல் ஆன்டி, சமையல் ஆன்டி என அவளிடம் நெருக்கமாகிறாள் ஹேமா. ஹேமா அழைத்ததன் பேரில் வீட்டுக்கு சென்று பார்த்த போது தான் அது பாரதியின் வீடு என கண்ணம்மாவுக்கு தெரிய வருகிறது. அந்த குழந்தை பாரதிக்கும் வெண்பாவுக்கும் பிறந்ததாக இருக்கும் என தனக்குள் நினைத்துக் கொள்கிறாள் கண்ணம்மா.



    இதற்கிடையே ஹேமா படிக்கும் பள்ளியின் ஆண்டு விழாவுக்கு பாரதியின் குடும்பத்தினர் அனைவரும் செல்கிறார்கள். அப்போது கண்ணாம்மாவிடம் வளரும் லட்சுமிக்கு பரிசளிக்கும் பாரதி, ‘இவளுக்கு கலெக்டர் ஆகணும்ன்னு லட்சியம். அதனால இவ படிப்பு செலவு முழுக்க நானே ஏத்துக்குறேன்’ என்கிறான். அப்போது தான் அது நம்முடைய இன்னொரு பேத்தி என செளந்தர்யாவுக்கு தெரிய வருகிறது. தொடர்ந்து பேசும் பாரதி, ’அம்மா மேல இவ்வளவு பாசம் வச்சிருக்கும் குழந்தையை நான் பாத்ததே இல்ல, அப்படின்னா அவங்க அம்மாவை மேடைக்கு கூப்பிடலாமா?’ என்கிறான். இதைக்கேட்ட கண்ணம்மா ஓடி ஒளிந்துக் கொள்கிறாள்.

    பாரதியும் கண்ணாம்மாவும் நேருக்கு நேர் சந்திப்பார்களா? குழந்தை குறித்த உண்மை தெரிய வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

     
    Published by:Shalini C
    First published: