இந்த வார டிஆர்பி ரேட்டிங் வெளியானது - முதல் 5 இடங்களை பிடித்த முக்கிய சீரியல்!

பாரதி கண்ணம்மா

கதாநாயகி ரோஜாவிற்கும், அர்ஜூனாக நடிக்கும் ஹீரோவிற்கு எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர்

 • Share this:
  விஜய் டிவி சீரியல்களில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் இந்த வாரம் வெளியான TRP ரேட்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது. கடந்த ஒரு சில நாட்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முதலிடத்தில் இருந்த நிலையில் தற்போது பார்தி கண்ணம்மா சீரியல் விட்ட இடத்தை மீண்டும் பிடித்துள்ளது.

  கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி முதல் பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ரோஷினி ஹரிப்பிரியன் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் மிகவும் பரபரப்பான கட்டத்தில் உள்ளது. லட்சுமி கண்ணம்மாவின் பெண் என்பதை அறிந்து கொண்ட பாரதி, அதை அவள் வாயாலேயே சொல்ல வைக்க எடுக்கும் முயற்சிகள், பாரதியின் வீட்டில் வளரும் ஹேமா அவர்கள் இருவருக்கும் பிறந்த பெண் தான் என்பது பாரதி மற்றும் கண்ணம்மாவிற்கு தெரிய வருமா? என்கிற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கிறது. இதனால் டிஆர்பியில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அண்ணன் - தம்பி பாசம் மற்றும் கூட்டு குடும்பத்தை கதைக்கருவாக கொண்டு 2018 முதல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இதில் தனலட்சுமி சத்யமூர்த்தி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் நடிகை சுஜிதா தனுஷ். இந்த சீரியலில் தனலட்சுமி, அவரது மூண்று தம்பிகள் மற்றும் மாமியாரை பராமரிப்பதில் கவனம் செலுத்துகிறார். தங்களுக்கென்று குழந்தை வேண்டும் என்று கூட யோசிக்காமல் சத்யமூர்த்தி - தனலட்சுமி தம்பதியர் ஜீவா, கதிர், கண்ணன் மூவரையும் தங்கள் குழந்தைகளாக நினைத்து வளர்த்து வந்த நிலையில் தற்போது தான் தனம் கர்ப்பமாக இருக்கிறார். இந்த சீரியலில் கடைசி தம்பியான கண்ணன் காதல் திருமணம் செய்த நிலையில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதனால் டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

  Also read... மனைவி மற்றும் நண்பர்களுடன் கோலாகலமாக பிறந்தநாள் கொண்டாடிய கார்த்திக் சசிதரன்!

  இதனை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் ரோஜா சீரியல் உள்ளது. இதில் கதாநாயகி ரோஜாவிற்கும், அர்ஜூனாக நடிக்கும் ஹீரோவிற்கு எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர். விஜய் டிவி-யில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விஜய் டிவி-யின் ஹிட் சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. வித்தியாசமான கதைகளம் என்பதால் இந்த சீரியலுக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது. இந்த சீரியலில் பாக்கியலட்சுமி என்ற குடும்பத்தலைவி கேரக்டரில் நடித்து பெண்கள் மற்றும் தாய்மார்களின் பேராதரவு பெற்றுள்ளார் நடிகை சுசித்ரா ஷெட்டி. சரியாக படிக்காத ஒரு குடும்பத்தலைவி, கணவர் உட்பட குடும்ப உறுப்பினர்களிடம் படும் நிறைய அவமானங்களை தாண்டி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி முன்னேறுகிறார் என்பதை மையக்கருவாக கொண்டு இந்த சீரியல் நகர்ந்து வருகிறது. விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

  இந்த லிஸ்டில் ஐந்தாவது இடத்தில் ராஜா ராணி சீரியல் உள்ளது. ஒரு கூட்டு குடும்பத்தை அடிப்படையாக கொண்ட இந்த சீரியலில் ஆலியா கதாநாயகியாக நடிக்கிறார். இதில் ஹீரோவின் தங்கைக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்படுகிறது, அது நல்லபடியாக நடக்குமா? ஆலியாவிற்கு அவரது கணவருடன் இருக்கும் மன வருத்தங்கள் மாறுமா? என்ற கோணத்தில் கதை நகர்கிறது.
  Published by:Vinothini Aandisamy
  First published: