• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • "கண்கள் நீயே காற்றும் நீயே..." மகனை இன்ஸ்டாவில் அறிமுகப்படுத்திய பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை!

"கண்கள் நீயே காற்றும் நீயே..." மகனை இன்ஸ்டாவில் அறிமுகப்படுத்திய பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

இதில் நாயகன் பாரதி மற்றும் அகிலனுக்கு தந்தையாக நடிகர் ரிஷிகேஷவ், தாயாக பிரபல சீரியல் நடிகை ரூபாஸ்ரீ ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

  • Share this:
    ஸ்டார் விஜய் டிவி-யில் சினிமா டைட்டில்களை வைத்து ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. சின்னத் தம்பி, ராஜா ராணி, ராஜா ராணி 2, மௌன ராகம், மௌன ராகம் 2, கடைக்குட்டி சிங்கம், வேலைக்காரன் உள்ளிட்ட பல சீரியல்கள் இதில் அடக்கம்.

    இதனிடையே கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் சினிமா டைட்டிலான "பாரதி கண்ணம்மா"-வை டைட்டிலாக கொண்டு ஸ்டார் விஜய் டிவி-யில், சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் சனி வரை இரவு 9 முதல் 9.30 வரை ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த சீரியல் பல விறுவிறுப்புகள் மற்றும் திருப்பங்களுக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

    பிரைம் டைமிங்கில் ஒளிபரப்பாகி வருவதால் இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு வரை விஜய் டிவி சீரியல்களில் அதிக டிஆர்பி-யை பெற்று முதல் இடத்தில் இருந்தது. இந்த சீரியலின் இடத்தை தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் பிடித்து கொண்டுள்ளதால், மீண்டும் முதலிடம் பிடிக்க பாரதி கண்ணம்மாவின் கதை விறுவிறுப்பாக காட்டப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் ஹீரோ பாரதியாக நடிகர் அருண் பிரசாத், ஹீரோயின் கண்ணம்மாவாக நடிகை ரோஷினி ஹரிபிரியன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

    இதில் நாயகன் பாரதி மற்றும் அகிலனுக்கு தந்தையாக நடிகர் ரிஷிகேஷவ், தாயாக பிரபல சீரியல் நடிகை ரூபாஸ்ரீ ஆகியோர், வேணு, சௌந்தர்யா என்ற கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இதில் பாரதியின் தாயாகவும், கண்ணம்மாவின் மாமியாராகவும் நடித்து ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்துள்ளார் நடிகை ரூபாஸ்ரீ.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இவர் சின்னத்திரைக்கு வரும் முன் மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். 1976 ஜூன் 11-ல் சென்னையில் பிறந்த இவர் தனது 13 வயது முதல் நடிப்பில் ஈடுபட்டு வருகிறார். பல திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்திருப்பதால் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரபலமாக இருக்கிறார். சினிமாத்துறை இவருக்கு பெரிதாக கைகொடுக்காத நிலையில், சின்னத்திரையில் இவரது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Rupa sree official (@rupasree01)






    பாரதி கண்ணம்மாவில் இவரது டிரெஸ்ஸிங் மற்றும் ஸ்டைல் பல பெண்களை கவர்ந்துள்ளது. 45 வயதிலும் இளமையாக காட்சியளிக்கும் நடிகை ரூபாஸ்ரீ சோஷியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். வித விதமான கெட்டப்பில் தனது இன்ஸ்டா பேஜில் அவ்வப்போது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறார்.

    இதனிடையே முதல் முறையாக நடிகை ரூபாஸ்ரீ தனது மகனுடன் இருக்க கூடிய வீடியோ ஒன்றை இன்ஸ்டா ரீலில் ஷேர் செய்து இருக்கிறார். தாய் குழந்தை மீதான பாசத்தை வெளிப்படுத்தும் பாடலான "முப்பொழுதும் உன் கற்பனைகள்" திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலான 'கண்கள் நீயே காற்றும் நீயே' பாடலை பாடி தன் மகனை கொஞ்சி உள்ளார். தன் மகன் மீது உள்ள பாசத்தை இன்ஸ்டா வீடியோ மூலம் வெளிப்படுத்தி உள்ள நடிகையின் வீடியோவிற்கு ரசிகர்கள் அற்புதமான வீடியோ என்று கமெண்ட்ஸ் செய்திருக்கிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: