• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாரதி கண்ணம்மா பிரபலத்துடன் நடிகை பிரியங்கா மோகனன் - கவனம் பெறும் வீடியோ!

பாரதி கண்ணம்மா பிரபலத்துடன் நடிகை பிரியங்கா மோகனன் - கவனம் பெறும் வீடியோ!

பிரியங்கா மோகன்

பிரியங்கா மோகன்

டாக்டர் படத்தின் ஹீரோயின் பிரியங்கா மோகனுடன் ரோஷினி இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

  • Share this:
    பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம் ரோஷினியுடன் டாக்டர் பட நடிகை பிரியங்கா இருக்கும் வீடியோ ரசிகர்களிடம் கவனம் ஈர்த்து வருகிறது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இல்லத்தரசிகளின் ஃபேவரிட்டாக மாறியுள்ளது. கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறான் பாரதி. அவர்கள் வாழ்க்கையில் விளையாடி இருவரையும் பிரித்து விடுகிறாள் வெண்பா. கண்ணம்மாவுக்கு பிறந்த இரட்டை குழந்தையில் கறுப்பாக பிறந்த ஹேமாவை மாமியார் செளந்தர்யா தூக்கிச் சென்று வளர்த்து வருகிறார்.

    இன்னொரு குழந்தை லட்சுமி கண்ணம்மாவிடம் வளர்கிறது. தன் மகள் என்று தெரியாமலேயே ஹேமா மீது உயிராக இருக்கிறான் பாரதி. தன் பள்ளியில் சமையல் செய்யும் கண்ணம்மா தனது அம்மா தான் எனத் தெரியாமலேயே அவளிடம் அன்பாக இருக்கிறாள் ஹேமா.

    இந்நிலையில் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த விஷயத்தை மருத்துவர் மூலம் தெரிந்துக் கொண்ட கண்ணம்மா, தனது இன்னொரு குழந்தையை தேடி அலைகிறாள். பின்னர் ஒருவழியாக தனது இன்னொரு குழந்தை ஹேமா என்ற விஷயம் அவளுக்கு தெரிய வருகிறது.

    இந்த உண்மை எப்போது பாரதிக்கு தெரிய வரும்? அவன் எப்போது டி.என்.ஏ டெஸ்ட் எடுப்பான் என்பதை தெரிந்துக் கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். இதற்கிடையே திடீரென பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி. சினிமாவில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக அவர் இந்த முடிவை எடுத்ததாக செய்திகள் தெரிவித்தன.




    இந்நிலையில், டாக்டர் படத்தின் ஹீரோயின் பிரியங்கா மோகனுடன் ரோஷினி இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இதையடுத்து இவர்கள் ஏதேனும் படத்தில் இணைந்து நடிக்கிறார்களா எனக் கேள்வி எழுப்பி வருகிறார்கள் ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: