• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bharathi Kannamma: ’பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து ரோஷினி ஹரிப்ரியன் விலகல்?

Bharathi Kannamma: ’பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து ரோஷினி ஹரிப்ரியன் விலகல்?

ரோஷினி ஹரிப்ரியன்

ரோஷினி ஹரிப்ரியன்

விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து, கண்ணம்மாவாக நடித்து வரும், ரோஷினி விலகுவதாக செய்திகள் வலம் வருகின்றன.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து நடிகை ரோஷினி ஹரிப்ரியன் விலகுவதாக தகவல்கள் வலம் வருகின்றன.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இல்லத்தரசிகளின் ஃபேவரிட்டாக மாறியுள்ளது. கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறான் பாரதி. அவர்கள் வாழ்க்கையில் விளையாடி இருவரையும் பிரித்து விடுகிறாள் வெண்பா. கண்ணம்மாவுக்கு பிறந்த இரட்டை குழந்தையில் கறுப்பாக பிறந்த ஹேமாவை மாமியார் செளந்தர்யா தூக்கிச் சென்று வளர்த்து வருகிறார்.

    இன்னொரு குழந்தை லட்சுமி கண்ணம்மாவிடம் வளர்கிறது. தன் மகள் என்று தெரியாமலேயே ஹேமா மீது உயிராக இருக்கிறான் பாரதி. தன் பள்ளியில் சமையல் செய்யும் கண்ணம்மா தனது அம்மா தான் எனத் தெரியாமலேயே அவளிடம் அன்பாக இருக்கிறாள் ஹேமா.

    இந்நிலையில் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த விஷயத்தை மருத்துவர் மூலம் தெரிந்துக் கொண்ட கண்ணம்மா, தனது இன்னொரு குழந்தையை தேடி அலைகிறாள். பின்னர் ஒருவழியாக தனது இன்னொரு குழந்தை ஹேமா என்ற விஷயம் அவளுக்கு தெரிய வருகிறது.

    அம்மா, மகளுடன் நடித்துள்ள ரஜினிகாந்த்! உலா வரும் படம்...

    இந்த உண்மை எப்போது பாரதிக்கு தெரிய வரும்? அவன் எப்போது டி.என்.ஏ டெஸ்ட் எடுப்பான் என்பதை தெரிந்துக் கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். இப்படி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து, கண்ணம்மாவாக நடித்து வரும், ரோஷினி விலகுவதாக செய்திகள் வலம் வருகின்றன.



     




    View this post on Instagram





     

    A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)






    இன்னும் 2 வாரங்கள் மட்டுமே அவர் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிப்பார் என்றும், அதன் பிறகு அவருக்கு பதில் வேறொருவர் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

    என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: