Bharathi Kannamma - Raja Rani 2: பாரதி கண்ணம்மாவில் இணைந்த ராஜா ராணி 2!

ராஜா ராணி 2 - பாரதி கண்ணம்மா

இரவு 9 மணி முதல் 10 மணி வரை விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிறது.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலும், ‘ராஜா ராணி’ சீரியலும் மெகா சங்கமமாக ஒளிபரப்பப் படுகிறது.

    பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவின் சூழ்ச்சியால் பாரதியும், கர்ப்பமாக இருந்த கண்ணம்மாவும் பிரிந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதற்கிடையே தனக்கு இரட்டை குழந்தை பிறந்த விபரம், மயக்கத்தில் இருந்த கண்ணம்மாவுக்கு தெரியாது. அதனால் கறுப்பாக பிறந்த குழந்தையை மாமியார் செளந்தர்யா, தூக்கிச் சென்று வளர்த்து வருகிறார். தன் மீது பாசமாக இருக்கும் ஹேமா, தனக்கு பிறந்த குழந்தை தான் என பாரதிக்கு இன்னும் தெரியாது.

    Shilpa Manjunath: நடிகை ஷில்பா மஞ்சு நாத் ‘வாவ்’ படங்கள்!

    இரண்டாவது குழந்தையான செளந்தர்ய லட்சுமி கண்ணம்மாவிடம் வளர்கிறது. தான் படிக்கும் பள்ளியில் சமையல் ஆண்டியாக அறிமுகமாகும் கண்ணம்மாவை ஹேமாவுக்கு மிகவும் பிடித்துப் போய் விடுகிறது. மறுபுறம் தனக்கு தெரிந்த லட்சுமியின் படிப்பு செலவை பாரதி ஏற்றுக் கொள்கிறான். இந்த உண்மையெல்லாம் செளந்தர்யா, வேணு, அகில் ஆகிய மூவருக்கும் தான் தெரியும்.



    Valimai: ‘வெற்றி பெற்றதும் வலிமை அப்டேட் நிச்சயம்’ – வானதி சீனிவாசன்!

    ’ராஜா ராணி’ சீரியலில் சந்தியாவின் படிப்பை மறைத்து, சரவணனுக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறான் அவளது அண்ணன். ஆனால் அவளுக்கோ படித்து போலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசை. இதற்கிடையே பல்கலைக்கழக அளவில் மூன்றாவது இடம் பிடித்த விஷயம் பேப்பரில் வந்து, சந்தியாவின் படிப்பை குடும்பத்தினருக்கு தெரிய வைக்கிறது.

    தன்னிடம் பொய் சொன்ன காரணத்தால் அவளை வீட்டை விட்டு வெளியேறச் சொல்கிறார் மாமியார். ஆனால் திருமணம் ஆனதுமே இந்த விஷயத்தை தன்னிடம் சந்தியா கூறியதாக, அவளைக் காப்பாற்றுகிறான் சரவணன். போதா குறைக்கு அவளை பழி வாங்க துடிக்கிறாள் அர்ச்சனா. இத்தனை விஷயங்களையும் கடந்து சந்தியா எப்படி போலீஸ் ஆவாள்? என்பதை விறுவிறுப்புடன் சொல்கிறது ராஜா ராணி.

    மேலே குறிப்பிட்டுள்ள 2 சீரியல்களையும் இந்த வாரம் ஒரே சீரியலாக 1 மணி நேரம் பார்க்கலாம். இரவு 9 மணி முதல் 10 மணி வரை விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: