• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’காஸ்டியூம்கெல்லாம் கேள்வியா?’ நடிகை நீபாவின் வேக்சின் டிரஸ் - நெட்டிசன்களின் கிண்டல்!

’காஸ்டியூம்கெல்லாம் கேள்வியா?’ நடிகை நீபாவின் வேக்சின் டிரஸ் - நெட்டிசன்களின் கிண்டல்!

நீபா

நீபா

திரையில் மும்தாஜ் கவர்ச்சியாக நடித்தாலும், நிஜ வாழ்க்கையில் அவருடைய குணம் வேறானது என தெரிவித்தார்

  • Share this:
    சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகையான நீபா, 2-வது டோஸ் வேக்சின் போடும்போது அணிந்திருந்த டிரஸைப் பார்த்து சில நெட்டிசன்கள் கிண்டலடித்துள்ளனர்.

    பெருசு திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமான நீபா, பள்ளிக்கூடம், தோட்டா, கண்ணும் கண்ணும் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இளைய தளபதி விஜய் - அசின் கூட்டணியில் உருவான காவலன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்ததும், பரவலான கவனத்தை பெற்றார். ஹீரோயினாக நடிக்க வேண்டும் என வெள்ளித்திரையில் நுழைந்த அவருக்கு, அங்கு கிடைத்த அனுபவங்கள் கசப்பானதாக இருந்தது.

    அவருடைய அப்பா மற்றும் அம்மா ஆகியோர் ஏற்கனவே நடன இயக்குநர்களாக இருந்ததால், இவரும் நடனம் கற்று இணை நடன இயக்குநராக சில படங்களில் பணிபுரிந்தார். அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி பெருசு திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார். ஆனால், வெள்ளித்திரையில் அவர் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. அப்பா உடல் நலிவுற்று இருந்ததால், மருத்துவச் செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டபோது கவர்ச்சியாக நடிக்கும் கதாப்பாத்திரங்கள் மட்டுமே வாய்ப்பாக வந்துள்ளது.

    குடும்ப சூழ்நிலை காரணமாக இறுக்கமான மனதுடன் அந்த வாய்ப்புகளை ஏற்றுக் கொண்டார். சில படங்களில் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்த அவர், பின்னர் சின்னத்திரையில் கவனம் செலுத்த தொடங்கினார். மானாட மயிலாட நடன நிகழ்ச்சி அவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்த அவர், வேலூரைச் சேர்ந்த தொழிலதிபரை மணந்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார்.

    அண்மையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, கசப்பான வாழ்க்கைப் பயணத்தையும் பகிர்ந்துகொண்டார். அதில், கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகள் அனைவரும் கால் கேர்ள்ஸ் இல்லை என வெளிப்படையாக பேசினார். கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகள் அனைவருக்கும் ஏதாவதொரு பின்புல சூழ்நிலை இருக்கும் என தெரிவித்த நீபா, அதற்கு உதாரணமாக மும்தாஜை குறிப்பிட்டார்.




    திரையில் மும்தாஜ் கவர்ச்சியாக நடித்தாலும், நிஜ வாழ்க்கையில் அவருடைய குணம் வேறானது என தெரிவித்தார். இதேபோன்று தான் தானும் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதாக கூறினார். அவருடைய இந்தப் பேட்டிக்குப் பிறகு நீபா, மீண்டும் கவனம் பெற்றவராக மாறினார். அண்மையில், கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட அவர், அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அந்தப் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், ‘ என்ன நீபா மேடம், தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காகவே இந்த உடையை அணிந்து கொண்டீர்களா?’ என கிண்டலாக கேட்டனர். மேலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு சின்னத்திரைக்கு திரும்பியிருக்கும் அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். விரைவில் நல்ல புராஜெக்டுகளில் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்தையும் நடிகை நீபாவுக்கு தெரிவித்தனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: