முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Bharathi Kannamma: ’பாரதி கண்ணம்மா’ அஞ்சலியா இது? மேக்கப் இல்லாத வீடியோ!

Bharathi Kannamma: ’பாரதி கண்ணம்மா’ அஞ்சலியா இது? மேக்கப் இல்லாத வீடியோ!

கண்மணி மனோகரன்

கண்மணி மனோகரன்

மாடலிங் துறையில் இருந்த கனிமொழி மனோகரன், வில்லி அஞ்சலியாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்

  • Last Updated :

பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் கலக்கி வரும் கண்மணி மனோகரன், மேக்கப் இல்லாத வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி சீரியல்களுள் ஒன்று பாரதி கண்ணம்மா. விறவிறுப்பான கதைக்களம் மற்றும் திருப்பங்களை கொண்ட இந்த சீரியலுக்கு தமிழகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உண்டு. முன்னணி நடிகர்கள் இல்லாமல், புதுமுக நடிகர்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட இந்த சீரியல் தொடக்கத்தில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும், போகபோக ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

மேயாதமான் திரைப்படத்தில் நடித்த அருண் பிரசாத் பாரதியாகவும், ரோஷினி கண்ணம்மாவாகவும் நடிக்கின்றனர். வில்லி கதாபாத்திரமான அஞ்சலியாக நடிகை கண்மணி மனோகரன் நடிக்கிறார். கதைப்படி கருத்த நிறம் கொண்ட கண்ணம்மா, அஞ்சலியின் அக்கா. அஞ்சலி மிகவும் அழகாக இருப்பார். வீட்டிற்கு பெண் பார்க்க வரும் பாரதி, முதலில் அஞ்சலியை பார்ப்பதற்காகவே வருகிறார். ஆனால், அங்கு அஞ்சலியின் அக்கா கண்ணம்மாவைப் பார்த்து பிடித்துப்போவதாக கூறுகிறார். அவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது.

பாரதியை விரும்பிய அஞ்சலி, அவர் கிடைக்காத விரக்தியில் இருக்கிறார். மேலும், தனது அக்காவான கண்ணம்மாவையும் பழிவாங்கத் துடிக்கிறார். இதையொட்டியே பல்வேறு திருப்பங்களுடன் கதைக்களம் நகர்கிறது. மாடலிங் துறையில் இருந்த கண்மணி மனோகரன், வில்லி அஞ்சலியாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். நாடகத்திலும் மேக்கப்பில் கலக்கும் அவர் முதன்முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்கப் இல்லாமல், வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.




 




View this post on Instagram





 

A post shared by farina azad (@farina_azad_official)



மேக்கப் இல்லாமல் அவரை பார்த்தவுடன் அவரா? இவர் என நினைக்கும் அளவுக்கு இருக்கிறார். கர்நாடகாவைச் சேர்ந்த கண்மணி மனோகரன் சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்தார். அழகாக புகைப்படம் எடுத்துக்கொள்வதில் விருப்பம் உள்ள அவர், தன்னுடைய புகைப்படங்களை சமூகவலைதளங்களிலும் பதிவேற்றி வந்துள்ளார். அந்தவகையில் அவருடைய புகைப்படம் ஒன்று விஜய் டிவி இயக்குநர் பிரவீன் பென்னட் பார்வைக்கு சென்றுள்ளது. அதன் பிறகே, ஆடிஷனுக்கு அழைக்கப்பட்டு அஞ்சலி கதாபாத்திரக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த அனுபவம் குறித்து கண்மணி மனோகரனும் தன்னுடைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், பயந்துகொண்டே ஆடிஷனுக்கு சென்றதாக தெரிவித்துள்ளார். உண்மையான பெயர் கண்மணி மனோகரன் என்றாலும், பாரதி கண்ணம்மா சீரியலில் செய்யும் வில்லத்தனங்களால் பொதுவெளியிலும் அஞ்சலியாகவே அவர் அறியப்படுகிறார். நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும், தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். மேலும், தோழிகளுடன் இணைந்து காமெடி வீடியோக்களும் செய்து அசரடிக்கிறார் அஞ்சலி. கண்மணியின் மற்றொரு பெயர் ஸ்வீட்டி. வீட்டில் எல்லோரும் அவரை ஸ்வீட்டி என்றே அழைப்பார்களாம்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: TV Serial