• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bharathi Kannamma: பாரதி கண்ணம்மா அருணின் ஒருநாள் சம்பளம் இவ்வளவா?

Bharathi Kannamma: பாரதி கண்ணம்மா அருணின் ஒருநாள் சம்பளம் இவ்வளவா?

பாரதியாக நடிக்க அருண் பிரசாத் ஒருநாளுக்கு இவ்வளவு சம்பளம் வாங்குகிறாரா?

பாரதியாக நடிக்க அருண் பிரசாத் ஒருநாளுக்கு இவ்வளவு சம்பளம் வாங்குகிறாரா?

நடிகர் வைபவ் மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் நடித்த மேயாத மான் திரைப்படத்தில் வைபவின் நண்பனாக நடித்திருந்தார் அருண்.

  • Share this:
    விஜய் டிவியில் காலை முதல் இரவு வரை எண்ணற்ற சீரியல்கள் ஒளிப்பரப்பாகி வந்தாலும் இரவு 9 மணி முதல் 9.30 வரை ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் சீரியலாக டெலிகாஸ்ட் ஆகி வருகிறது. இதில் பாரதியாக நடிகர் அருண் பிரசாத் நடித்து வருகிறார். கண்ணம்மா வேடத்தில் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து இருந்த நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் சினிமா வாய்ப்பு காரணமாக சீரியலில் இருந்து சமீபத்தில் விலகினார்.

    இதனை தொடர்ந்து வினுஷா தேவி என்பவர் கண்ணம்மாவாக நடித்து வருகிறார். இவர்களை தவிர இந்த சீரியலில் பிரபல சீரியல் நடிகை ரூபா ஸ்ரீ , நடிகை ஃபரீனா , நடிகை கண்மணி, நடிகர் ரிஷி கேசவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஹீரோ பாரதி ரோலில் நடித்து வரும் நடிகர் அருண் பிரசாத் சேலத்தை சேர்ந்தவர் ஆவார். சேலத்தில் பிறந்து வளர்ந்தாலும் அருண் பிரசாத்தின் ஆசை சென்னைக்கு செல்ல வேண்டும் என்பதிலேயே இருந்தது. ஏனென்றால் சினிமாவில் ஹீரோ ஆகி வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் வேரூன்றியது.

    சினிமாவில் எப்படியும் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் சேலத்திலிருந்து தலைநகர் வந்த அருண் பிரசாத், சென்னை கிறித்தவ கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படிப்பில் சேர்ந்து வெற்றிகரமாக படிப்பை முடித்தார். விஸ்காம் என்பதால் படிக்கும் போதே நண்பர்களுடன் சேர்ந்து பல குறும்படங்களில் வேலை பார்த்த அருண் பிரசாத், சில குறும்படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். முதன் முதலாக நிகழ்காலம் என்ற குறும்படத்தில் ஹீரோவாக நடித்த இவர், தொடர்ந்து ஏனோ வானிலை மாறுதே, மதி மயங்கினேன், கள்ளன், ஏதோ மாயம் செய்தாய், யானும் தீயவன், பகல் கனவு போன்ற பல குறும்படங்களில் நடித்தார்.

    பின்னர் நடிகர் வைபவ் மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் நடித்த மேயாத மான் திரைப்படத்தில் வைபவின் நண்பனாக கிஷோர் என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் தனது கனவுலகமான வெள்ளித்திரைக்குள் நுழைந்தார். இந்த வாய்ப்பே பல போராட்டங்களுக்கு பின்னர் தான் இவருக்கு கிடைத்து உள்ளது. தொடர்ந்து 'ஜடா' திரைப்படத்தில் நடிகர் கதிரின் நண்பனாக நடித்தார் அருண் பிரசாத்.

    இந்த திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்த போது தான் விஜய் டிவி சீரியலில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. முதலில் தயங்கிய அருண் பிரசாத் வெள்ளித்திரை பயணம் எதிர்பார்த்ததை விட கடினமானது என்பது உணர்ந்து சின்னித்திரைக்குள் பாரதியாக நுழைந்தார். வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் குறுகிய காலத்தில் இவருக்கு நல்ல ரீச் கிடைத்தது.

    இதனால் உற்சாகமாக சீரியலில் நடித்துவரும் இவர், துவக்கத்தில் பாரதியாக நடிப்பதற்கு நாளொன்றுக்கு ரூ.15,000 சம்பளம் வாங்கி வந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி ஒரு நாளைக்கு ரூ.20,000 சம்பளம் பெற்று வருகிறார். இதே சீரியலில் நடித்து வந்த அகில் மற்றும் ரோஷினி ஆகியோர் சினிமா வாய்ப்பால் சீரியலை விட்டு விலகி உள்ள நிலையில், நடிகர் அருண் பிரசாத்தும் சினிமா வாய்ப்பிற்காக தீவிரமாக முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    First published: