Home /News /entertainment /

முன்னணி சேனலின் புதிய சீரியலில் ஸ்வீட்டி? பாரதி கண்ணம்மா அஞ்சலிக்கு குட் பை?

முன்னணி சேனலின் புதிய சீரியலில் ஸ்வீட்டி? பாரதி கண்ணம்மா அஞ்சலிக்கு குட் பை?

கண்மணி மனோகரன்

கண்மணி மனோகரன்

பாரதி கண்ணம்மா சீரியல் தவிர, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கியிருக்கும் ‘சூப்பர் குயின்’ நிகழ்ச்சியிலும் போட்டியாளராகக் களமிறங்கியிருக்கிறார்.

    பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலியாக நடித்து வரும் கண்மணி மனோகரன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய சீரியலில் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் தங்கை அஞ்சலியாக வில்லத்தனங்களை செய்து வந்தவர் கண்மணி மனோகரன். அஞ்சலியைப் பெண் பார்க்க வரும் பாரதிக்கு, அவளது அக்கா, கண்ணாம்மாவை பிடித்துப் போக, அவளையே திருமணம் செய்துக் கொள்கிறான்.

    பாரதியின் தம்பி அகிலுக்கு அஞ்சலியைப் பிடித்துப் போக, இது தான் நேரம் என்று கருதி, தம்பியை திருமணம் செய்துக் கொண்டு, கண்ணாம்மா வாழ்க்கையைக் கெடுத்து, பாரதியை அடைந்து விடலாம் என கணக்குப் போடுபவளாக நடித்தார் கண்மணியாக ஸ்வீட்டி. தற்போது அவரது கதாபாத்திரம் பாஸிட்டிவாக மாற்றப்பட்டதால், சமர்த்து பிள்ளையாக நடித்து வருகிறார்.

    இவரின் நிஜப்பெயர் கண்மணி மனோகரன். கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்த கண்மணி, சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்தவர். இவரை வீட்டில் செல்லமாக அழைக்கும் பெயர் ஸ்வீட்டி. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே பிற்காலத்தில் ஒரு ஈஸியான வேலையை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்ததாம் கண்மணிக்கு. அப்போது அவரது மனதுக்குள் உதித்தது தான் நடிப்புத் துறை.

    இது கனவாக இருக்கக் கூடாதா? தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர்

    ஒரு நாள், ஆடிஷன் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவைப் பார்த்த கண்மணி, தனது புகைப்படங்களையும் டிக்டாக் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். அடுத்த நாள், பாரதி கண்ணம்மா சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட்டிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது. இப்படித்தான் அவருக்கு பாரதி கண்ணம்மாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் கண்மணி, தனது படங்களை பதிவிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

    தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவு குறித்து முன்பே ட்விட்டரில் குறிப்பிட்ட செல்வராகவன்?

    பாரதி கண்ணம்மா சீரியல் தவிர, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கியிருக்கும் ‘சூப்பர் குயின்’ நிகழ்ச்சியிலும் போட்டியாளராகக் களமிறங்கியிருக்கிறார். இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகவிருக்கும் சீரியல் ஒன்றில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க கண்மணி கமிட்டாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருப்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv, Zee tamil

    அடுத்த செய்தி