• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஷிவாங்கியுடன் என்னை ஒப்பிட வேண்டாம் - சீரியல் நடிகை நேஹா மேனன்

ஷிவாங்கியுடன் என்னை ஒப்பிட வேண்டாம் - சீரியல் நடிகை நேஹா மேனன்

ஷிவாங்கி | நேஹா மேனன்

ஷிவாங்கி | நேஹா மேனன்

விஜய் டிவி பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் நடிகை நேஹா மேனன் தன்னை குக்வித் கோமாளி ஷிவாங்கியுடன் ஒப்பிட வேண்டாம் என்று கூறியுள்ளார்.

  • Share this:
சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், ராதிகா சரத்குமாரின் சூப்பர் ஹிட் சீரியலான 'சித்தி 2' மற்றும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்யலட்சுமி' ஆகிய சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை நேஹா மேனன். சீரியல் மட்டுமல்லாது வெள்ளித்திரையிலும் 'நாரதன்' மற்றும் 'ஜாக்சன் துரை', ‘யட்சன்’, உள்ளிட்ட ஒருசில படங்களிலும் நடித்துள்ளார்.

பாக்யலட்சுமி சீரியலில் இனியா என்ற நேஹா மேனனின் கதாபாத்திரத்தைச் சுற்றியே இப்போது கதை நகர்ந்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் கடந்த மாதம் தனது அம்மா பெண் குழந்தை பெற்றிருப்பதாக மகிழ்ச்சியான செய்தியை பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் நேஹா மேனனின் புகைப்படத்தோடு குக்வித் கோமாளி ஷிவாங்கியின் போட்டோவையும் இணைத்து ரசிகர்கள் சிலர் சமீபத்தில் போஸ்ட் செய்துள்ளனர். அதைப்பார்த்த ஒரு சிலர் ஷிவாங்கியுடன் நேஹாவை ஒப்பிடாதீர்கள் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.



இதுகுறித்து வீடியோ வெளியிட்டிருக்கும் நேஹா மேனன், ஷிவாங்கியுடன் என்னை இணைத்து ஒரு பதிவை உருவாக்கியிருந்தார்கள். அது அன்பால் செய்யப்பட்டது. ஆனால் அதைப்பார்த்த சிலர் ஷிவாங்கியுடன் நேஹாவை ஒப்பிட வேண்டாம் என்று கூறியிருந்தார்கள். தயவு செய்து என்னை அவருடன் ஒப்பிட வேண்டாம். ஷிவாங்கி மிகவும் திறமைவாய்ந்தவர். அவருக்கு நானும் ரசிகைதான். அதனால் என்னை அவருடன் ஒப்பிட வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: