இல்லத்தரசிகளின் செல்ல பாக்கியா... 14 வயதில் தொடங்கிய சுசித்ராவின் திரைப்பயணம்!

விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல்

பெங்களூரை இருப்பிடமாக கொண்ட இவர் தன்னுடைய திரை வாழ்க்கையை 14 வயதிலேயே தொடங்கி விட்டார் சுசித்ரா.

  • Share this:
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் பற்றிய அறிமுகமே தேவையில்லை. அதிலும் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்துக் கொண்டு மற்ற சீரியல்களுக்கு கடும் போட்டியாக நிலவி வருகிறது. இந்த சீரியலில் அம்மாவாக நடித்து வரும் பாக்கியலட்சுமி என்கிற சுசித்ரா ஒவ்வொரு இல்லத்தரசிகளின் உள்ளங்களை பிரதிபலிப்பதுபோல் நடித்து வருகிறார். பலரின் உள்ளம் கவர்ந்த சீரியல் நடிகையாகவும் வலம் வருகிறார்.

பெங்களூரை இருப்பிடமாக கொண்ட இவர் தன்னுடைய திரை வாழ்க்கையை 14 வயதிலேயே தொடங்கி விட்டார். உபேந்திரா அவர்களின் தங்கையாக எ(A) என்ற படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து ஒன்மேன் ஆர்மி என்ற படத்திலும் மஞ்சுநாதா, காட் பாதர், சிவா, பீமா, கிரெசி ஸ்டார் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் 20க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ளார். வெள்ளி திரையில் நடித்துக் கொண்டு இருக்கும்பொழுது சுசித்ராவுக்கு சின்ன திரையின் மீது ஆர்வம் ஏற்பட்டது. அவரின் முதல் சீரியல் மனே தன என்ற கன்னட தொடர். மேலும் அபரஜ்ஜித, நாகாம்மா, பந்தம், மௌன ராகம், அபிலாஷா போன்ற பத்திற்கும் மேற்பட்ட தெலுங்கு தொடர்களில் நடித்து வந்துள்ளர்.இவர் தமிழில் சின்னத்திரைக்கு அறிமுகமானது கலைஞர் டிவியில் ராபர்ட் ராஜஸேகரன் இயக்கத்தில் 2008ல் ஒளிபரப்பான நாணல் தொடரின் மூலம்தான். பாக்கியலட்சுமி தொடர், ஸ்டார் ஜல்சா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஸ்ரீமோயி’ என்ற பெங்காலி மொழித் தொடரின் ரீமிக்ஸ் ஆகும். இந்த சீரியல் குறித்த பேச்சுவார்த்தையில் சுசித்ரா தான் சரியாக இருப்பார் என இயக்குனரால் தேர்வு செய்யப்பட்டார்.

சுசித்ராவை செட்டில் எல்லோரும் அம்மா என்றே அழைப்பார்கள். ஏனென்றால் செட்டிலும் அவர் ரீல் பாக்கியா போலவே அன்புடன்  கவனிப்பாராம். இவரின் நீண்ட நாள் என்னவென்று கேட்டால் அம்மா ஆவது என்கிறார். குழப்பம் வேண்டாம் விஜய், அஜித், சூர்யா ஆகியோருக்கு அம்மாவாக வெள்ளித்திரையில் ஆவதாம்.
Published by:Sreeja
First published: