என்னை நீங்கள் திட்டினால் அது எனக்கு கிடைத்த விருதுதான் - பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்

என்னை நீங்கள் திட்டினால் அது எனக்கு கிடைத்த விருதுதான் - பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்

பாக்கியலட்சுமி சீரியல் குழு

பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்காக அத்தொடரில் கோபிநாத் என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகர் செட்டி ராஜூபாய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. சுசித்ரா பாக்கியலட்சுமி என்ற கேரக்டரிலும் அவரது கணவராக கோபிநாத் என்ற கதாபாத்திரத்தில் ராஜூவும் நடித்து வருகின்றனர். இவர்களுடன் விஜே விஷால், சதிஷ் குமார், நந்திதா ஜெனிபர், வேலுராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

சீரியல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இத்தொடரில் பாக்கியலட்சுமியின் கணவரான கோபிநாத் கேரக்டர் தனது முன்னாள் காதலியோடு தொடர்பில் இருப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பாக்கியலட்சுமி கணவர் மற்றும் குடும்பத்தாரின் நலனுக்காக வாழ்வதாகவும் கதை நகர்கிறது. கதையோடு பொருந்திப்போன கதாபாத்திரமாக கோபிநாத் அமைந்திருப்பதால் அந்தக் கேரக்டர் மீது ரசிகர்களுக்கு அதிக கோபம் வருகிறது.

இந்நிலையில் ரசிகர்களின் மனநிலையை புரிந்து கொண்ட நடிகர் ராஜூ தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது’ “எனது முதலாளி எனக்கு சம்பளம் கொடுக்கிறார். அதற்காக நான் நடிக்கிறேன். ஹீரோவாக நடிப்பதில் எந்த ஒரு கிக்கும் இல்லை. ஒரே மாதிரி தேவதாஸ் மாதிரி தான் ஒருக்க வேண்டும். வில்லன் கேரக்டரில் நடிப்பது தான் கெத்து. ரஜினிகாந்த், ரகுவரன், பிரகாஷ்ராஜ் மாதிரி வில்லன் ரோலில் நடித்தால் தான் ஒரு சுவாரஸ்யம் இருக்கும்.இதுவெறும் கதைதான். நீங்கள் என்னை எவ்வளவு திட்டினாலும், கோபித்துக் கொண்டாலும் அதை எனக்கு கொடுக்கும் விருதாக எடுத்துக் கொள்கிறேன்.” என்று நடிகர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: