Home /News /entertainment /

Baakiyalakshmi Serial: இவ்ளோ வெகுளித்தனம் வேணாம் பாக்கியா - சூழ்ச்சி வலை விரிக்கும் கோபி

Baakiyalakshmi Serial: இவ்ளோ வெகுளித்தனம் வேணாம் பாக்கியா - சூழ்ச்சி வலை விரிக்கும் கோபி

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியலின் சமீபத்திய எபிசோட்கள் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றன.

    ஸ்டார் விஜய் டிவி-யில் திங்கள் - சனி வரை இரவு 8.30 - 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் விறுவிறுப்பான சூப்பர் ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி. வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இல்லத்தரசிகளை ஊக்குவிக்கும் வகையில் பல ட்விஸ்ட்கள் மற்றும் சுவாரசியங்கள் நிறைந்த பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கேரக்டர்களான பாக்கிய லட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, அவரது கணவர் கோபியாக நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகின்றனர். இவர்களை தவிர கோபியின் தந்தை ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்டிபி ரோசரி, தாய் ஈஸ்வரியாக பிரபல நடிகை ராஜலக்ஷ்மி உள்ளிட்டோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சீரியலுக்கு வலு சேர்த்து வருகின்றனர்.

    பாக்கியலட்சுமி சீரியலின் சமீபத்திய எபிசோட்கள் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றன. பாக்கியாவின் தோழியான ராதிகா தன் மகன் கோபியுடன் பழகி வருவதை அறிந்த தந்தை ராமமூர்த்தி (எஸ்டிபி ரோசரி) மகனை கண்டிக்கிறார். சூட்டோடு சூட்டாக ராதிகா வீட்டிற்கும் சென்று அவர் சத்தம் போட, ராதிகாவின் தாய் மட்டுமே அங்கிருக்கிறார். அவரோ ராதிகா வந்தவுடன் கோபியின் தந்தை வந்து சண்டையிட்டதாக கூற, சத்தம் போட்டது பாக்கியாவின் மாமனார் என்கிற விஷயம் ராதிகாவிற்கு தெரியாமல் போகிறது.

    தந்தை கண்டித்த பிறகும் ராதிகா வீட்டிற்கு செல்வதை கோபி நிறுத்தவில்லை. இதனிடையே தாய் ராதிகா, தங்களது வீட்டிற்கு வந்து செல்லும் கோபி அங்கிளை திருமணம் செய்து கொள்ள போவதாக பாக்கியாவின் வீட்டிற்கு விளையாட வரும் குழந்தை மயூ சொல்ல அதிர்கிறார் கோபியின் தந்தை. ஆத்திரத்தின் உச்சிக்கே செல்லும் அவர் கோபி வந்த பிறகு ராதிகாவிடம் அவன் பழகும் விஷயம், ராதிகா மற்றும் பாக்கியாவிற்கு தெரியாமல் ஒரே நேரத்தில் அவன் நடத்தும் நாடகம் இரண்டையும் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி அவன் குட்டை உடைக்க போவதாக சொல்லி விட்டு வேகவேகமாக படியிலிருந்து கீழிறங்கும் போது கால்தவறி கீழே விழ, BP-யும் அதிகரித்ததால் அடிபட்டத்தில் அவருக்கு ஒரு கையும், காலும் இழுத்து பக்கவாதம் வந்து பேச்சும் வராமல் போகிறது. வீட்டிலேயே படுத்தப்படுக்கையாக இருக்கும் அவர் கோபியை பார்த்தலே கொந்தளிப்பதை எழில் அவ்வப்போது கவனிக்கிறான்.

    Valentine's Day 2022: காதலர்கள் மிஸ் பண்ணக்கூடாத தமிழ் ரொமாண்டிக் திரைப்படங்கள்!

    இந்நிலையில் ராதிகாவுக்கு தனது கணவன் ராஜேஷிடமிருந்து டைவர்ஸ் கிடைத்து விடுகிறது. இதனை தொடர்ந்து சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் கோபியை வக்கீல் ஆபிஸிற்கு கூட்டி சென்று அவனுக்கும் டைவர்ஸ் பத்திரம் ரெடி செய்து கொடுக்கிறாள். அந்த பத்திரத்தில் உங்கள் மனைவியிடம் கையெழுத்து வாங்கிக் கொடுங்கள் என்று வக்கீல் சொல்லி அனுப்புகிறார். இதை தொடர்ந்து டைவர்ஸ் பத்திரத்தில் சைன் வங்கியாச்சா என்று ராதிகா கோபியிடம் கேட்டு கொண்டே இருக்கிறாள் பாக்கியா தான் கோபியின் மனைவி என்பது தெரியாமல். அத்துடன் கடைசி எபிசோட் முடிந்திருந்த நிலையில் வரப்போகும் எபிசோடின் ப்ரமோ வெளியாகி இருக்கிறது.

    Arabic Kuthu: 45 நிமிடத்தில் 1 மில்லியன் வியூஸ்... 5 மில்லியன் நிகழ்நேர பார்வைகள்... பட்டையைக் கிளப்பும் விஜய்யின் அரபிக் குத்து!






    Beast Arabic Kuthu: விஜய், பூஜா ஹெக்டேவின் தாறுமாறான ஆட்டத்தில் அரபிக் குத்து பாடல் வீடியோ!

    அதில் ராதிகாவின் போன் காலை தொடர்ந்து, பாக்கியாவிடம் நீ ஒரு சைன் போடணும் பாக்கியா என்கிறான் கோபி. ஆனால் கோபி செய்ய துணிந்த துரோகம் பற்றி தெரியாமல் " எதில் என்று சொல்லுங்கள் சைன் போடுகிறேன்" என்று உடனே சொல்ல, இதில் தான் என்று டைவர்ஸ் பத்திரத்தை நீட்டுகிறான் கோபி. அது என்ன பேப்பர் என்று கூட மறுகேள்வி கேட்காமல் காட்டிய இடத்தில சைன் போடும் பாக்கியாவை பார்த்து அதிர்ச்சி கொள்ளும் கோபி, " சைன் போடுவதற்கு முன்னே இதில் என்ன இருக்கிறது என்று ஒரு வார்த்தை கூட கேட்கவில்லையே" என்று கேள்வி எழுப்ப அதற்கு பாக்கியவோ " நீங்கள் தானே சைன் போட சொல்றீங்க, உங்களிடம் என்ன கேட்பது" என்று கணவன் மீது தான் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறாள். இதனால் மேலும் அதிர்கிறான் கோபி. எதிர்பார்த்தபடி பாக்கியா சைன் போட்டு விட, இனி கோபி என்ன முடிவு எடுக்க போகிறான் என்பது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி