Home /News /entertainment /

Baakiyalakshmi: கோவை மக்களே பாக்கிய லட்சுமியை நேரில் சந்திக்க ரெடியா?

Baakiyalakshmi: கோவை மக்களே பாக்கிய லட்சுமியை நேரில் சந்திக்க ரெடியா?

பாக்கிய லட்சுமி

பாக்கிய லட்சுமி

கலக்கப்போவது யாரு, பிக் பாஸ் புகழ் அறந்தாங்கி நிஷா இவர்களுடன் இணைந்து நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யப்படுத்தவிருக்கிறார்.

    விஜய் டிவி-யின் பாக்கியலட்சுமி சீரியல் குழுவை நேரில் சந்திக்க, சீரியல் ரசிகைகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

    விஜய் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, அவரது கணவர் கோபியாக நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகின்றனர்.

    பாக்கியாவின் மாமனாராக, ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்டிபி ரோசரி, மாமியார் ஈஸ்வரியாக பிரபல நடிகை ராஜலக்ஷ்மி, மூத்த மகன் செழியனாக நடிகர் ஆர்யன், இளையமகன் எழிலாக விஜே விஷால், மகள் இனியாவாக நடிகை நேஹா மேனன், மருமகள் ஜெனியாக திவ்யா கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

    பாக்யாவின் கணவர் கோபி, கணவரை பிரிந்த ராதிகாவுடன் நெருக்கம் காட்ட, ஒரு கட்டத்தில் திருமணம்செய்துக் கொள்ள சொல்லி ராதிகா தரப்பில் அழுத்தம் தரப்படுகிறது. இதற்காக பாக்யாவை விவாகரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதை பாக்யா எப்படி தாங்கிக் கொள்வாள், ராதிகாவை கோபி திருமணம் செய்துக் கொள்வானா? என்ற ரீதியில் தற்போது பாக்கிய லட்சுமி சீரியலின் கதை சென்றுக் கொண்டிருக்கிறது.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் சிம்பு நடிக்கப்போவதாக தகவல்

    இந்நிலையில் கோவையில் இருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகைகளுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் நாளை மார்ச் 11-ம் தேதி மாலை 6 மணிக்கு பாக்கிய லட்சுமி சீரியல் குழுவினர் கோவையிலுள்ள ரசிகைகளை மகிழ்விக்க நேரில் வருகிறார்கள். இதுவரை டிவி-யில் அவர்களைப் பார்த்து மகிழ்ந்தவர்கள், நேரில் பாக்கிய லட்சுமி சீரியல் குழுவினரின் நடிப்பைப் பார்க்கலாம். பாக்கிய லட்சுமி குழுவினருடன் விஜய் டிவி-யின் சூப்பர் சிங்கர் குழுவினரும் இதில் கலந்துக் கொள்ளவிருக்கிறார்கள்.

    நடிகர் தனுஷின் பிரமாண்ட வீட்டைப் பார்த்திருக்கிறீர்களா? புகைப்படம் இதோ...

    கலக்கப்போவது யாரு, பிக் பாஸ் புகழ் அறந்தாங்கி நிஷா இவர்களுடன் இணைந்து நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யப்படுத்தவிருக்கிறார். இதனை பாக்கியாவின் மகன் எழில் தொகுத்து வழங்கவிருக்கிறார். விளையாட்டு, உரையாடல் என கலக்கலாக இருக்கப்போகிறது இந்நிகழ்வு.

    அதோடு, கோவையைச் சேர்ந்த பெண் சாதனையாளர்களை மேடை ஏற்றி அவர்களை கெளரவிக்கவும் இருக்கிறது பாக்கிய லட்சுமி சீரியல் குழு.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி