Home /News /entertainment /

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து இவர் விலக போகிறாரா.? என்ன காரணம்.?

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து இவர் விலக போகிறாரா.? என்ன காரணம்.?

Baakiyalakshmi

Baakiyalakshmi

Baakiyalakshmi serial Actress | பாக்கியா, கோபி ஆகிய இருவரின் பெயரை கேட்காதவர்களே இல்லை என்கிற அளவிற்கு இந்த சீரியல் வைரலாகி உள்ளது.

விஜய் டிவி தொடர்கள் என்றாலே அவை அனைத்துமே மக்களின் விருப்பமான தொடராக தான் இருக்கின்றன. அந்த அளவிற்கு பல விதமான கதைகளை சீரியலில் கொண்டு வந்து, பார்வையாளர்களை கட்டி போட்டு விடுகின்றனர். அதே போன்று பல விஜய் டிவி தொடர்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முதன்மையான இடத்தை பெற்று வருகிறது. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், இப்போது டாப்பில் இருக்க கூடிய பாக்கியலட்சுமி தொடரை சொல்லலாம்.

இந்த சீரியல் பலருக்கும் பிடிக்கும். முக்கியமாக தமிழகத்தில் இருக்கும் எல்லா குடும்ப பெண்களின் ஆதரவை இந்த சீரியல் பெற்றுள்ளது. அந்த அளவிற்கு பாக்கியலட்சுமி சீரியல் பிரபலமாகி உள்ளது. பாக்கியா, கோபி ஆகிய இருவரின் பெயரை கேட்காதவர்களே இல்லை என்கிற அளவிற்கு இந்த சீரியல் வைரலாகி உள்ளது. இந்த தொடர் எந்த அளவிற்கு மக்களின் மத்தியில் பரவி உள்ளது என்பதை அறிய, சீரியல் குழுவினரும் மற்ற ஊர்களில் உள்ள பெண்களை நேரில் சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்டனர்.

இவற்றை புகைப்படங்களாக எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டனர். இவை மிகவும் பேசுபொருளாக மாறியது. சின்னத்திரை பிரபலங்கள் பலர் இருந்தாலும் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே தனது திறமை மற்றும் அற்புதமான நடிப்பின் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்து விடுவார்கள். மக்களின் மனங்களில் முக்கிய இடத்தை பிடித்து விட்டாலே அவர்கள் நடிக்கும் சீரியல்கள் கண்டிப்பாக ஹிட்டாகி விடும். இப்படிப்பட்ட முக்கிய இடத்தை மக்கள் மத்தியில் பிடித்தவர் தான் பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியா.



இவரை போலவே அந்த தொடரில் மேலும் சிலரின் பாத்திரங்கள் மக்களுக்கு பிடித்தவையாக இருந்து வருகிறது. கோபி, எழில், ராதிகா, ஜென்னி, செழியன், இனியா, ஈஸ்வரி என பல முக்கிய கதாபாத்திரங்களும் மக்களுக்கு பிடித்தவையாக உள்ளன. அந்த வகையில், இந்த தொடரில் ஜெனிபர் என்கிற கதாபாத்திரத்தில் திவ்யா கணேஷ் என்பவர் நடித்து வருகிறார். ஆரம்பம் முதலே ஜெனி பாக்கியாவிற்கு மிகவும் உறுதுணையாக இருக்க கூடிய ஒருவராக இருந்து வருகிறார்.

Also Read : விஜய் டிவியின் தீராத விளையாட்டு பிள்ளை.. பாக்கியலட்சுமி கோபியின் உண்மையான மனைவி இவர் தான்!

அதனாலேயே இவருடைய கதாபாத்திரம் பல மாமியார்களுக்கும் பிடித்த ஒன்றாக உள்ளது. இவர் தற்போது விஜய் டிவியிலேயே ஒளிபரப்பாகும் புதிய தொடரான 'செல்லம்மா' சீரியலிலும் நடிக்கிறார். எனவே அவர் பாக்கியலட்சுமி தொடருக்கான ஷூட்டிங் முடித்ததும் உடனே செல்லம்மா தொடருக்கான ஷூட்டிங்கிற்கு செல்ல வேண்டியது இருக்கிறது.



இதனால் பாக்கியலட்சுமி சீரியல் செட்டில் திவ்யாவால் அதிக நேரம் தொடர்ந்து இருக்க முடிவதில்லை. இதுகுறித்து பாக்கியலட்சுமி தொடரில் இனியாவாக நடிக்கும் நேஹா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதன்படி, திவ்யா கணேஷை டேக் செய்து 'வி மிஸ் யூ அக்கா' என பதிவிட்டுள்ளார்.

Also Read : இரண்டாவது கணவர் மற்றும் மகனுடன் நடிகை ஊர்வசி - வைரலாகும் ஃபேமிலி போட்டோ!

இந்த பதிவை பார்த்ததும், பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் திவ்யா கணேஷ் அதில் இருந்து வெளியேறுகிறாரா என அதிர்ச்சியுடன் கமெண்ட் செய்து வருகின்றனர். அதன் பிறகு நேஹா, 'அப்படி ஒன்றும் இல்லை' அடுத்த சீரியல் ஷூட்டிங்கிற்கு செல்வதால் மிஸ் யூ என்று பதிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.
Published by:Selvi M
First published:

Tags: TV actress, TV Serial, Vijay tv

அடுத்த செய்தி