• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • எழிலுடன் பாக்கியலட்சுமி ராதிகா... என்னா மார்டன் பாருங்க!

எழிலுடன் பாக்கியலட்சுமி ராதிகா... என்னா மார்டன் பாருங்க!

ரேஷ்மா - விஷால்

ரேஷ்மா - விஷால்

பெற்றோரின் வறுபுறுத்தலால் காதலித்த பெண்ணான ராதிகாவை விட்டுவிட்டு பாக்கியாவை, திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துகிறான் கோபி.

  • Share this:
    ஸ்டார் விஜய் டிவி-யில் சின்னத்திரை ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் ரசிகர்களின் அபிமானம் பெற்ற சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று.

    திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கு விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. சராசரி குடும்ப தலைவி படும் கஷ்டங்கள், அவமானங்கள் உள்ளிட்டவற்றை வெளிச்சம் போட்டு காட்டும் சீரியலாக இருப்பதால் ஏராளமான ரசிகர்கள் குறிப்பாக பெண் ரசிகர்களை பெற்றுள்ளது பாக்கியலட்சுமி.

    பாக்கியலட்சுமி கேரக்டரில் நடித்து பெண்கள் மற்றும் தாய்மார்களின் பேராதரவு பெற்றுள்ளார் நடிகை சுசித்ரா ஷெட்டி. பாக்கியலட்சுமியின் கணவர் கோபி கேரக்ட்ரில் சீரியல் நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகிறார். கதைப்படி இவர்களுக்கு செழியன், எழில், இனியா என்ற 3 பிள்ளைகள் இருக்கின்றனர். மூத்த மகன் செழியன், ஜெனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு கூட்டு குடும்பமாக வாழ்கிறான். மகள் இனியா பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறாள். எழிலாக விஜே விஷால் நடித்து வருகிறார்.

    பெற்றோரின் வறுபுறுத்தலால் காதலித்த பெண்ணான ராதிகாவை விட்டுவிட்டு பாக்கியாவை, திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார் கோபி. சரியாக படிக்காத காரணத்தால் எப்போதுமே பாக்கியாவை அவமானப்படுத்தி கொண்டே இருக்கிறார் கோபி. ஆனால் சந்தர்ப்ப சூழலால் ராதிகாவும் - பாக்கியாவும் நல்ல நண்பர்களாகி விடுகின்றனர். தற்போது வரை ராதிகாவிற்கு, கோபி பாக்கியாவின் கணவர் என்பது தெரியாமலும், பாக்கியா மற்றும் குடும்பத்தினருக்கு ராதிகா கோபியின் தோழி மற்றும் முன்னாள் காதலி என்பது தெரியாமலும் கதைக்களம் விறுவிறுப்பாக நகர்த்தப்பட்டு வருகிறது.



     




    View this post on Instagram





     

    A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)






    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ராதிகாவிற்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், கோபி அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று பார்த்து வருகிறார். இது யாருக்கும் தெரியாமல் ஒவ்வொரு முறையும் ஏதாவது செய்து தப்பித்துவிடுகிறார். எனினும் இதனை தற்செயலாக பார்த்த கோபியின் மகன் எழில், அவரை எச்சரித்துள்ளார். அதன் பின்னரும் கோபி, ராதிகாவை அடிக்கடி சந்தித்து வருகிறார். இதனிடையே இந்த சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நந்திதா ஜெனிஃபர் சீரியலில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக நடிகை ரேஷ்மா தற்போது நடித்து வருகிறார்.

    இந்த நேரத்தில் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள் விஜய்யில் ஒளிபரப்பாக இருக்கும் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். அந்நிகழ்ச்சியின் போது ரேஷ்மா, விஷாலுடன் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் செம மாடர்ன் உடையில் இருக்கிறார். பாக்கியலட்சுமி சீரியலில் எப்போதும் புடவை கட்டி குடும்ப பெண்ணாக வரும் ரேஷ்மா மாடல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: