முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அவமானப்படுத்தும் ராதிகா... அதிரடி முடிவெடுக்கும் பாக்யா! விறுவிறு பாக்கியலட்சுமி!

அவமானப்படுத்தும் ராதிகா... அதிரடி முடிவெடுக்கும் பாக்யா! விறுவிறு பாக்கியலட்சுமி!

பாக்கியலட்சுமி ப்ரோமோ

பாக்கியலட்சுமி ப்ரோமோ

பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொள்ளும் கோபி பக்கத்து வீட்டிற்கு குடி வருகிறான்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆங்கிலம் தெரியாத பாக்கியாவை, ராதிகா அவமானப்படுத்தும் பாக்கியலட்சுமி சீரியல் ப்ரோமோ யூ-ட்யூப் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது.

விஜய் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியாவின் மாமனாராக, ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்டிபி ரோசரி, மாமியார் ஈஸ்வரியாக பிரபல நடிகை ராஜலக்ஷ்மி, மூத்த மகன் செழியனாக விகாஷ் சம்பத், இளையமகன் எழிலாக விஜே விஷால், மகள் இனியாவாக நடிகை நேஹா மேனன், மருமகள் ஜெனியாக திவ்யா கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொள்ளும் கோபி பக்கத்து வீட்டிற்கு குடி வருகிறான். அவ்வப்போது பாக்கியாவை சீண்டுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறான். கேட்டரிங் தொழில் செய்து, குடும்பத்தை காப்பாற்றி வரும் பாக்கியா, கூடவே பல பிரச்னைகளையும் சாமாளித்து வருகிறாள்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கேட்டரிங் ஆர்டர் எடுக்கப் போகும் பாக்கியாவிடம் ஆங்கிலத்தில் பேசுகிறாள் ராதிகா. ஆனால் அது புரியாத பாக்கியா என்ன பேசுவதென்று தெரியாமல் முழிக்கிறாள். அப்போது இங்கிலீஷ் கூட தெரில, எப்படி ஆர்டர் தருவது என தனது உயர் அதிகாரியிடம் கூறுகிறாள் ராதிகா. அதற்கு, ”யாரும் பிறக்கும் போதே, எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டு பிறக்குறது இல்ல. தேவைன்னு வரும்போது தானே தெரிஞ்சுக்குறோம். அதே மாதிரி இதையும் தெரிஞ்சுக்குறேன்” என்கிறாள் பாக்கியா.

' isDesktop="true" id="899953" youtubeid="ItNoKv45Q6I" category="television">

தற்போது இந்த ப்ரோமோ யூ-ட்யூப் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Vijay tv