Home /News /entertainment /

Baakiyalakshmi: தங்கையின் முதல் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடிய பாக்கிய லட்சுமி இனியா!

Baakiyalakshmi: தங்கையின் முதல் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடிய பாக்கிய லட்சுமி இனியா!

நேகா மேனன்

நேகா மேனன்

19 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வருடம் தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார் நேஹாவின் அம்மா.

    பாக்கியலட்சுமி சீரியல் இனியா தனது தங்கையின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்யலட்சுமி' சீரியலில் இனியாவாக நடித்து வருபவர் நடிகை நேகா மேனன். குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய அவர், 'நாரதன்' மற்றும் 'ஜாக்சன் துரை' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். சன் டிவி-யில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலில் ராதிகாவின் மகளாக நடித்த அவர், அவரின் சித்தி 2 சீரியலில் செவ்வந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

    பின்னர் அதிலிருந்து விலகிய நேகா மேனன், பாக்கிய லட்சுமி சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார். பாக்கியலட்சுமி சீரியலில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் சுசித்ராவும், சதீஷும் நடித்து வருகிறார்கள். இல்லத்தரசிகள் தங்கள் தனித்தன்மையை நிரூபிக்க எவ்வளவு போராட வேண்டியுள்ளது என்பதை மையப்படுத்தி இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

    அரபிக் குத்து பாடலுக்கு ஷில்பா ஷெட்டி, ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் அட்டகாச நடனம்!

    நேஹா 2002-ஆம் ஆண்டில் பிறந்தார். அந்த வகையில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வருடம் தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார் நேஹாவின் அம்மா. அப்போது தான் ஒரு தாயைப் போல உணர்வதாகவும், தங்கையை வளர்க்க காத்துக் கொண்டிருப்பதாகவும் இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டிருந்தார் நேஹா.

    எதிர் நீச்சல் சீரியல் இயக்குநர் திருச்செல்வத்தை கண்டித்து புகைப்பட கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்

    Baakiyalakshmi Iniya celebrated her sister's first birthday, Baakiyalakshmi iniya, Baakiyalakshmi live streaming, vijay tv Baakiyalakshmi, Baakiyalakshmi hotstar, Baakiyalakshmi Neha Menon celebrated her birthday at midnight in the Mediterranean, neha menon, neha menon sister, neha menon instagram, neha menon chithi 2, neha menon sevvanthi, neha menon baakiyalakshmi, neha menon iniya, neha menon mother, நேஹா மேனன், நேஹா மேனன் சகோதரி, நேஹா மேனன் இன்ஸ்டாகிராம், நேஹா மேனன், நேகா மேனன் சித்தி 2, நேஹா மேனன் பாக்யலட்சுமி
    நேகா மேனன்


    இந்நிலையில் நேஹா தனது தங்கை சாஹிதியின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார். இதில் பாக்கியலட்சுமி சீரியலில் எழிலாக நடித்து வரும் வி.ஜே.விஷாலும் கலந்துக் கொண்டுள்ளார். தற்போது அந்தப் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் கவனம் ஈர்த்து வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி