Home /News /entertainment /

நள்ளிரவில் நடுக்கடலில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை - என்ன பண்ணாங்க தெரியுமா?

நள்ளிரவில் நடுக்கடலில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை - என்ன பண்ணாங்க தெரியுமா?

நேஹா மேனன்

நேஹா மேனன்

இல்லத்தரசிகள் தங்கள் தனித்தன்மையை நிரூபிக்க எவ்வளவு போராட வேண்டியுள்ளது என்பதை மையப்படுத்தி இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

    பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா மேனன் நள்ளிரவில், நடுக்கடலில் தனது 19-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

    சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், சூப்பர் ஹிட் சீரியலான 'சித்தி 2' மற்றும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' ஆகிய சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை நேகா மேனன். சித்தி 2 சீரியலில் செவ்வந்தி கோமதிநாயகமாக கலக்கிக் கொண்டிருக்கிறார். ‘பாக்யலட்சுமி’ சீரியலில் பாக்யாவின் மகள் இனியா கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய அவர், 'நாரதன்' மற்றும் 'ஜாக்சன் துரை' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக பாக்கியலட்சுமி சீரியலில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதில் முன்னணி கதாபாத்திரத்தில் சுசித்ராவும், சதீஷும் நடித்து வருகிறார்கள்.

    ஐஸ்வர்யாவை பிரிந்ததால் நிறைவேறாமல் போன தனுஷின் நீண்ட நாள் கனவு

    இல்லத்தரசிகள் தங்கள் தனித்தன்மையை நிரூபிக்க எவ்வளவு போராட வேண்டியுள்ளது என்பதை மையப்படுத்தி இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் பாக்கிய லட்சுமி சீரியல் குழுவினர் சம்மந்தப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

    இது மீனா இல்ல... ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் இந்த பிரபலம் யார் தெரியுமா?

    அதில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் சேர்ந்து இனியாவாக நடித்து வரும் நேஹாவின் பிறந்த நாளை நள்ளிரவில் நடுக்கடலில் கொண்டாடியிருக்கிறார்கள். அதில் எழில், ஜெனி, செல்வி என அனைவரும் கலந்துக் கொண்டுள்ளனர். கண்களைக் கட்டி நேஹாவுக்கு சர்ப்ரைஸும் கொடுத்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி