அமிர்தாவிடம் காதலை சொல்ல போகிறாரா எழில்? - பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

பாக்கியலட்சுமி சீரியல்

எழிலாக விஜே விஷால் மற்றும் அமிர்தாவாக ரித்திகா தமிழ் செல்வி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

 • Share this:
  ஸ்டார் விஜய் டிவி-யில் சின்னத்திரை ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் ரசிகர்களின் அபிமானம் பெற்ற சீரியல்களும் உண்டு. மாலை நேரத்தில் பிரைம் டைமிங்கில் ஒளிப்பரப்பாகும் விஜய் டிவி சீரியல்களுக்கு சின்னத்திரை ரசிகர்கள் அமோக ஆதரவை அளித்து வருகின்றனர்.

  அதில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கு விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. சராசரி குடும்ப தலைவி படும் கஷ்டங்கள், அவமானங்கள் உள்ளிட்டவற்றை வெளிச்சம் போட்டு காட்டும் சீரியலாக இது இருப்பதால் ஏராளமான ரசிகர்கள் குறிப்பாக பெண் ரசிகர்களை பெற்றுள்ளது பாக்கியலட்சுமி.

  பாக்கியலட்சுமி கேரக்டரில் நடித்து பெண்கள் மற்றும் தாய்மார்களின் பேராதரவு பெற்றுள்ளார் நடிகை சுசித்ரா ஷெட்டி. பாக்கியலட்சுமியின் கணவர் கோபி கேரக்டரில் சீரியல் நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகிறார். கதைப்படி இவர்களுக்கு செழியன், எழில், இனியா என்ற 3 பிள்ளைகள் இருக்கின்றனர். மூத்த மகன் செழியன், ஜெனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு கூட்டு குடும்பமாக வாழ்கிறான். மகள் இனியா பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறாள். இவர்கள் இருவருக்கும் இடையில் பிறந்த எழில் சினிமா துறையில் நுழைந்து தனது முதல் படத்தை இயக்கி கொண்டிருப்பது போல காட்டப்பட்டு வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  எழிலின் தோழியாக காட்டப்பட்டு வருகிறார் அமிர்தா. எழிலாக விஜே விஷால் மற்றும் அமிர்தாவாக ரித்திகா தமிழ் செல்வி ஆகியோர் நடித்து வருகின்றனர். அமிர்தாவை முதல் முதலாக ரோட்டில் சந்திக்கும் எழில், தனது குறும்படத்திற்கு ஹீரோயினாக அவரை நடிக வைக்க பெரும் முயற்சிகள் மேற்கொண்டார். பலமுறை அமிர்தாவை சந்தித்து பேசிய பிறகே அவர் எழிலிடம் சகஜமாக பேசி பழகி குறும்படத்தில் நடித்து கொடுத்தார். அப்படியே இவர்களின் நட்பு வளரும் போது ஒரு கட்டத்தில் அமிர்தா ஏற்கனவே திருமணம் ஆனவர், அவரது கணவர் எதிர்பாராவிதமாக விபத்தில் இறந்து விட்டார் என்ற அதிர்ச்சிகரமான உண்மை எழிலுக்கு தெரிய வருகிறது.

  இந்த உண்மையை அமிர்தாவின் அப்பாவாக அனைவர் முன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் அவரது மாமனார் எழிலிடம் சொல்வது போல காட்டப்பட்டது. அதன் பின்னர் தனது உண்மை கதையை எழிலிடம் கூறும் அமிர்தா, தற்போது மாமனார் மற்றும் மாமியாரையே அப்பா, அம்மா என்று நினைத்து அதன்படியே வாழ்ந்து வருவதாக தெரிவித்தார். அமிர்தாவின் மீது இருப்பது காதலா என்பத்து தெரியாமல் தொடர்ந்து பழகி வரும் எழில், அவளது மாமனார் மற்றும் மாமியாரிடம் பல நல்ல செயல்களையும், உதவிகளையும் செய்த பிறகு நல்ல பெயர் எடுக்கிறார். அமிர்தாவிடம் நட்பு அடிப்படியிலேயே பழகி வருவதாகவும், வேறு எந்த நோக்கத்திற்காகவும் உங்களிடமோ அல்லது அமிர்தாவிடமோ பழக்கவில்லை என்று அவர்களிடம் எழில் சில எபிசோடுகளுக்கு முன்னர் கூறுவது போல காட்டப்பட்டது.

  இதனிடையே கோபி - பாக்கியா - ராதிகா உள்ளிட்ட கேரக்டர்களை வைத்து சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அடுத்த ட்விஸ்ட்டாக எழில் தனது காதலை அமிர்தாவிடம் சொல்லி விடும் வகையில் கதைக்களம் நகர போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒருவேளை எழில் தன் காதலை வெளிப்படுத்தினால் அமிர்தா அதை எப்படி எடுத்து கொள்வார், அமிர்தாவின் மாமனார் மற்றும் மாமியாரின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: