பாக்கிய லட்சுமி சீரியலில் இருந்து தான் விலகியது குறித்து முதன் முதலில் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் நடிகர் ஆர்யன்.
விஜய் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, அவரது கணவர் கோபியாக நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகின்றனர்.
பாக்கியாவின் மாமனாராக, ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்டிபி ரோசரி, மாமியார் ஈஸ்வரியாக பிரபல நடிகை ராஜலக்ஷ்மி, மூத்த மகன் செழியனாக நடிகர் ஆர்யன், இளையமகன் எழிலாக விஜே விஷால், மகள் இனியாவாக நடிகை நேஹா மேனன், மருமகள் ஜெனியாக திவ்யா கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷ் வெளியிட்ட மகிழ்ச்சியான புகைப்படம்!
பாக்யாவின் கணவர் கோபி, கணவரை பிரிந்த ராதிகாவுடன் நெருக்கம் காட்ட, ஒரு கட்டத்தில் திருமணம்செய்துக் கொள்ள சொல்லி ராதிகா தரப்பில் அழுத்தம் தரப்படுகிறது. இதற்காக பாக்யாவை விவாகரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதை பாக்யா எப்படி தாங்கிக் கொள்வாள், ராதிகாவை கோபி திருமணம் செய்துக் கொள்வானா? என்ற ரீதியில் தற்போது பாக்கிய லட்சுமி சீரியலின் கதை சென்றுக் கொண்டிருக்கிறது.
பிளாட் ஃபார்முக்கு வந்த விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரகேசர் - காரணம் என்ன?
இதற்கிடையில் பாக்கியலட்சுமி சீரியலில்
செழியனாக நடித்து வந்த ஆர்யன், சமீபத்தில் அதிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக அந்தக் கதாபாத்திரத்தில் விகாஷ் சம்பத் நடித்து வருகிறார். இந்நிலையில் பாக்கிய லட்சுமி சீரியலில் தான் நடித்த செழியன் கதாபாத்திரத்திற்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஆர்யன். அதோடு தனக்கு அளித்த ஆதரவு போல், விகாஷ் சம்பத்திற்கும் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்க
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.