Home /News /entertainment /

என் கனவு நனவாகிடுச்சு... புதிய கார் வாங்கிய பாக்கிய லட்சுமி அமிர்தா உருக்கம்!

என் கனவு நனவாகிடுச்சு... புதிய கார் வாங்கிய பாக்கிய லட்சுமி அமிர்தா உருக்கம்!

ரித்திகா தமிழ்செல்வி

ரித்திகா தமிழ்செல்வி

தான் கார் வாங்கியிருக்கும் சந்தோஷமான செய்தியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ரித்திகா தமிழ்செல்வி.

    விஜய் டிவி-யின் பாக்கிய லட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்து வரும் தமிழ் ரித்திகா, புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

    2018-ஆம் ஆண்டில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வினோதினி என்கிற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் ரித்திகா தமிழ்செல்வி. இவரை ஒட்டுமொத்த தமிழ் டிவி ரசிகர்களுக்குக்கும் அறிமுகம் செய்த பெருமை - பாக்கியலட்சுமி சீரியலையும், குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியையுமே சேரும்!

    நம்மவர் கமல், ஸ்டார்ட் மியூசிக் (சீசன் 2), காமெடி ராஜா கலக்கல் ராணி போன்ற பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டிருந்தாலும், பல்வேறு டிவி விளம்பரங்களிலும் நடித்திருந்தாலும், பாக்கியலட்சுமி சீரியலும், குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியுமே ரித்திகாவின் தொழில் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

    கோவையில் பள்ளிப்படிப்பை முடித்த இவர் தனது கல்லூரி படிப்பை (Msc Computer Science) சென்னையில் முடித்தார். கல்லூரி வாழ்க்கைக்கு பின் மாடலிங் துறையில் ஈடுபட்ட இவர், திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல்களுக்கான ஆடிஷன்களில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். ஒருவழியாக தனது முதல் டிவி சீரியலாக "ராஜா ராணி" சீரியலில் அறிமுகமானார். அதன் பின்னர் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

    நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ரூ.200 கோடி வசூலை கடந்த பீஸ்ட்?

    பாக்கியலட்சுமி சீரியல் கதாநாயகி பாக்யாவின் மகனான எழிலுக்கு ஜோடியாக நடிக்கும் ரித்திகா, வெறுமென ஒரு சப்போர்டிங் ரோலாக வலம் வராமல், கணவனை இழந்த ஒரு பெண் குழந்தையுடன் படும் கஷ்டங்களையும், மறுமணம் செய்து கொள்வதில் இருக்கும் சமூக சிக்கல்களையும் கண்முன் காட்டுகிறார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Rithika Tamilselvi (@tamil_rithika)






    மோடியை புகழ்ந்த இளையராஜா... திராவிடன் எனப் பெருமைப்படும் யுவன்... எதிரெதிர் துருவத்தில் அப்பா-மகன்?

    தற்போது தான் கார் வாங்கியிருக்கும் சந்தோஷமான செய்தியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ரித்திகா தமிழ்செல்வி. இதுகுறித்து பதிவிட்டுள்ள ரித்திகா, “சொந்தமாக கார் வாங்குவது என்பது அனைவரின் கனவு... என்னுடையதும் கூட... உங்கள் அனைவரின் அன்பு, ஆதரவு மற்றும் எல்லாம் வல்ல இறைவனின் ஆசியுடன் இன்று எனது கனவு நனவாகியுள்ளது. உங்கள் இலக்கை அடையும் வரை கடினமாக உழைக்கவும். ஒரு நாள் கடவுள் நாம் விரும்பும் இடத்தை அடைய உதவுவார். மகிழ்ச்சியாகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் உணர்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி