சின்னத்திரையில் பல பிரபல சேனல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. டிவி ரசிகர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப பல வகை நிகழ்ச்சிகள் மற்றும் ஷோக்களை ஒளிப்பரப்பை தங்கள் பக்கம் ஈர்க்க பல சேனல்களும் போட்டி போட்டு கொண்டிருக்கின்றன.
எத்தனை டிவி சேனல்கள் புதிது புதிதாக வந்தாலும், வெரைட்டி வெரைட்டியாக ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பினாலும் அவற்றில் தவறாமல் இடம் பெறும் ஒன்றாக இருக்கின்றன சீரியல்கள். தமிழகத்தில் சீரியல்களை பொறுத்தவரை நேரடி போட்டி சன் டிவி மற்றும் ஸ்டார் விஜய் டிவி ஆகிய இரண்டுக்கும் இடையில் தான். என்றாலும் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்னும் வகையில் பல ஷோக்கள் மற்றும் சீரியல்களை டெலிகாஸ்ட் செய்து ரசிகர்களை தங்கள் பக்கம் ஈர்த்து வருகின்றன சில முன்னணி சேனல்கள்.
அந்த வகையில் ஜீ தமிழ் சேனல் மெல்ல மெல்ல டிவி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறது. இதற்கு சான்று தான் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த "யாரடி நீ மோகினி" சீரியல். இந்த சீரியல் நிறைவுற்றாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அதே போல இந்த சேனலில் தற்போது வரை வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் செம்பருத்தி உள்ளிட்ட பல சீரியல்கள் ரசிகர்களுக்கு பிடித்தவை பட்டியலில் இருக்கின்றன.
இந்நிலையில் ஜீ தமிழ் சேனலில் விரைவில் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சீரியலில் விஜய் டிவி-யின் சூப்பர் ஹிட் சீரியலான பாக்கியலட்சுமியில் செழியன் என்ற கேரக்டரில் முன்பு நடித்த நடிகர் ஆர்யன் ஹீரோவாக லீட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவருக்கு ஜோடியாக செம்பருத்தி சீரியலின் கன்னட வெர்ஷனான 'பாரு' என்ற சீரியலின் கதாநாயகி மோக்ஷிதா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
செம்பருத்தி சீரியல் ஹீரோயின் நடிகை ஷபானாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு சில நாட்கள் மட்டுமே பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த நடிகர் ஆர்யன், திடீரென சீரியலில் இருந்து விலகினார். இந்நிலையில் ஜீ தமிழ் மூலம் மீண்டும் சின்னத்திரையில் தோன்ற உள்ளார் ஆர்யன் என்ற தகவல் அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனினும் சீரியலில் டைட்டில், கதை உள்ளிட்ட சில முக்கிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இதனிடையே ஏற்கனவே பல சீரியலில் வில்லியாக நடித்துள்ள நடிகை சுபத்ரா, இந்த சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆர்யன் - ஷபானா ஜோடிக்கு நிறைய ரசிகர்கள் இருக்கும் நிலையில் முதல் முறையாக லீட் ரோலில் நடிக்க போகும் நடிகர் ஆர்யனுக்கு ஷபானாவின் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Published by:Tamilmalar Natarajan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.