• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மூளை அறுவை சிகிச்சைக்குப் பிறகு விஜய் டிவி அர்ச்சனாவின் முதல் நிகழ்ச்சி!

மூளை அறுவை சிகிச்சைக்குப் பிறகு விஜய் டிவி அர்ச்சனாவின் முதல் நிகழ்ச்சி!

அர்ச்சனா

அர்ச்சனா

ஆபரேஷன் முடிந்து பூரண குணமடைந்த விஜே அர்ச்சனா - வைரலாகும் புகைப்படம்!

  • Share this:
    சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளிகளில் ஒருவர் வி.ஜே அர்ச்சனா. சன் டிவியில் தொகுப்பாளனியாக மீடியாவுக்குள் நுழைந்த அவர், விஜய் டிவியில் நம்ம வீட்டு கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானர். பின்னர், ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு சென்ற அவர், பல்வேறு ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கினார்.

    இதனைத் தொடந்து பிக்பாஸ் ஷோ மூலம் மீண்டும் விஜய் டிவிக்கே திரும்பிய அர்ச்சனா, இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பாராட்டுகளையும், விமர்சனங்களையும் பெற்றார். எனினும் விமர்சனங்களை காதில் வாங்காமல் மீண்டும் தனது பணிகளை தொடங்கிய அர்ச்சனா, விஜய் டிவியில் Mr and Mrs சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியில் மா.கா.பா ஆனந்துடன் இணைந்து தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

    மேலும் மகள் ஸாராவுடன் இணைந்து யூ-ட்யூப் சேனலை நடத்தி, அதிலும் வித்தியாசமான கன்டென்டுகளை கொடுத்து டிரெண்டிங்கிலும் இடம்பிடித்து வந்தார். இவர் வெளியிட்ட பாத்ரூம் டூர் வீடியோ பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. இதனை தொடர்ந்து ரேடியோ ஜாக்கியாக மிர்ச்சி தமிழ் ரேடியோவில் பணியை தொடங்கினார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென தனக்கு ஆப்ரேஷன் நடக்க இருப்பதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார்.

    மூளையில் சிறிய ஆப்ரேஷன் செய்ய வேண்டியிருப்பதாகவும், நலமுடன் திரும்ப அனைவரும் வேண்டிக் கொள்ளுமாறும் அவரது சமூக வலைதள பக்கங்களில் கேட்டு கொண்டார். மேலும், தன்னுடைய மகள் ஸாரா தொடர்ந்து, ஹெல்த் அப்டேட்டை கொடுப்பார் எனவும் கூறியிருந்தார். அதன்படியே, ஒவ்வொரு நாளும் அர்ச்சனாவின் ஹெல்த் அப்டேட்டை ஸாரா கொடுத்துக்கொண்டிருந்தார். அதில் ஆபரேஷன் முடிந்து 10 நாட்கள் மருத்துவமனை ஓய்வுக்குப் பிறகு அர்ச்சனா வீடு திரும்பியது குறித்தும் ஸாரா புகைப்படங்களை ஷேர் செய்திருந்தார்.




    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் அர்ச்சனாவின் தங்கைக்கு குழந்தை பிறந்த நிலையில் அவருடன் அர்ச்சனா, ஸாரா இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வபோது ஷேர் செய்திருந்தனர். இந்நிலையில் அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும், மீண்டும் படபிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக தனது யூடியூப் சேனலில் தெரிவித்தார். அதன்படி விஜய் டிவியில் நம்ம வீட்டு கல்யாணம் என்ற ஷோ படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் சினேகன் மற்றும் கனிகாவின் திருமண வரவேற்பு ஸ்பெஷல் நிகழ்ச்சியாக படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் ஆபரேஷனுக்கு பின்னர் முதன்முதலாக அர்ச்சனா பங்கேற்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு பூரண குணமடைந்து அவர் கலந்து கொண்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: