• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கணவருடன் அறந்தாங்கி நிஷாவின் அட்டகாச ஃபோட்டோஷூட்!

கணவருடன் அறந்தாங்கி நிஷாவின் அட்டகாச ஃபோட்டோஷூட்!

அறந்தாங்கி நிஷா

அறந்தாங்கி நிஷா

மேடைப்பேச்சாளரான நிஷா, விஜய் டிவி மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமான பிறகு கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார்.

  • Share this:
    விஜய் டிவி பிரபலம் அறந்தாங்கி நிஷா, கணவருடன் எடுத்துக் கொண்ட படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

    சினிமாவிலும் சரி, சின்னத்திரையிலும் சரி பெண் காமெடியன்கள் என்பது மிகவும் அரிதான விஷயம். அப்படியே தடைகளை தகர்த்து ஒரு பெண் திரையில் தோன்றினாலும், அவளை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வது மிக மிக கடினம். இன்றளவும் மனோரமா, கோவை சரளா அளவுக்கு வேறு யாராலும் காமெடியில் உச்சம் தொட முடியவில்லை என்பதே உண்மை.

    இது ஒருபுறமிருக்க, சின்னத்திரையில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனெக்கென ஒர் இடத்தை பிடித்தவர் அறந்தாங்கி நிஷா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பல்வேறு ஆண் போட்டியாளர்கள் மத்தியில் கலந்துகொண்டு தனது பிரபலமானார்.

    மேடைப்பேச்சாளரான நிஷா, விஜய் டிவி மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமான பிறகு கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார். தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். அதோடு விஜய் டிவி-யின் நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வருகிறார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Aranthai Nisha (@aranthainisha)






    இந்நிலையில் தற்போது நிஷா, தனது கணவருடன் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ’ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்தும் என்ன, வேர் என நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். எனக்கு நானே சொல்லிக்கிறேன்’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: