புல்லட்டில் ஹாயாக வலம் வரும் விஜய் டிவி அம்மா நடிகை - வீடியோ

புல்லட்டில் ஹாயாக வலம் வரும் விஜய் டிவி அம்மா நடிகை - வீடியோ

பிரகதி

44 வயதாகும் பிரகதி தனது மகனுடன் இணைந்து ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

 • Share this:
  விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய ‘அரண்மனைக்கிளி’ சீரியலை யாரும் மறந்திருக்க முடியாது. அதில் ஹீரோவின் அம்மா மீனாட்சியாக நடித்திருந்தவர் நடிகர் பிரகதி.

  சீரியலில் மட்டுமல்ல பல திரைப்படங்களில் ஹீரோயினாகவும், குணச்சித்திர வேடங்களிலும் அவர் நடித்துள்ளார். ‘திரைக்கதை மன்னர்’ இயக்குநர் பாக்யராஜின் ‘வீட்ல விசேஷங்க’ திரைப்படம் மூலமாகத் தமிழுக்கு நாயகியாக அறிமுகமானார் பிரகதி. அறிமுகப்படம் வெற்றிப்படமாகவே அமைந்த போதிலும் அடுத்தடுத்த படங்கள் பெரிதாக பேசப்படவில்லை.   
  View this post on Instagram

   

  A post shared by Pragathi Mahavadi (@pragstrong)


  தெலுங்கு மற்றும் தமிழில் 120-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரகதி, இரு முறை நந்தி விருதும் பெற்றுள்ளார். திருமணத்திற்குப் பிறகு சீரியல்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அதோடு பிட்னஸில் ஆர்வம் மிகுந்த பிரகதி, அவ்வப்போது தனது உடற்பயிற்சி வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். 44 வயதாகும் அவர் தனது மகனுடன் இணைந்து ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

  இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு தனித் திறமையால் நம்மை புருவம் உயர்த்த செய்திருக்கிறார். சேலை கட்டிக் கொண்டு புல்லட்டில் கம்பீரமாக வலம் வரும் தனது வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார் பிரகதி. அந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: