ஆங்கர் பிரியங்கா விஜய் டிவியை விட்டு விலக போவதாக தகவல் ஒன்று இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இப்படியொரு பேச்சு எழ காரணமே அவர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ தான்.
விஜய் டிவியில் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்து வைத்திருக்கும் பிரியங்கா கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது யூடியூப் பக்கத்தில் ‘ஹாப்பி ப்ர்த்டே மக்களே’ என்ற வீடியோவை வெளியிட்டார். அதாவது பிரியங்கா கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி தனது 30 வது பிறந்த நாளை பயங்கர கிராண்டாக கொண்டாடினார். அந்த கொண்டாட்ட வீடியோவை தான் சரியாக 1 மாதம் கழித்து மே 28ஆம் தேதி தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார். அந்த வீடியோவில் பிரியங்காவின் கேக் கட்டிங், அவருக்கு ரசிகர்கள் அளித்த கிஃப்டுகள், வீட்டில் டீஜே வைத்து கொண்டாட்டம் என பல நிகழ்வுகள் இடம் பெற்று இருந்தன.
பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலத்திற்கு திருமணம்.. குவியும் வாழ்த்துக்கள்!
மிகவும் எமோஷனலாக இந்த வீடியோவை பிரியங்கா பகிர்ந்து இருந்தார். அதுவே அவருக்கு இப்படியொரு பிரச்சனையை உருவாக்கும் என்று அப்போது பிரியங்கா நினைத்திருக்க மாட்டார். அதாவது வீடியோவின் கடைசியில் குக் வித் கோமாளி பாலா பிரியங்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறுவார். மார்னிங் முதல் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த பாலா ஈவ்னிங் பிரியங்காவை சந்தித்து காரில் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறுவார்.
அப்போது பிரியங்கா பலாவிடம் ”எனக்கு 30 வயசு ஆகுது. போதும் ஆங்கரிங் பண்றத நிறுத்திகலாமுன்னு பாக்குறேன்” என்பார். அதற்கு பாலா ”மைக் பிடிச்சவங்க எல்லாம் ஆங்கர் ஆகிட முடியாது அந்த மைக்குக்கே பிடிசவங்க நீ.. நீ அதை விட்டாலும் உன்ன அதை விடாது” என்பார். இந்த வீடியோவில் பிரியங்கா சொன்ன அந்த வார்த்தை தான் இப்போது காட்டுத்தீ போல் பரவி கொண்டிருக்கிறது. ஆனால் இதை நன்கு கவனித்தால் தெரியும் பிரியங்கா இந்த வார்த்தையை விளையாடி கொண்டே ஃபன் காக தான் சொல்வார் அதுமட்டுமில்லை இந்த வீடியோ 1 மாதத்ததுக்கு முன்பு எடுக்கப்பட்டது,
’ராஜா ராணி 2’ சீரியல் நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டது! உங்களுக்கு தெரியுமா?
ஆனால் இப்போது வரை தொடர்ந்து பிரியங்கா தான் பிபி ஜோடிகள் 2, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ஆங்கரிங் செய்து வருகிறார். அப்படியென்றால் பிரியங்கா சொன்ன வார்த்தை வெறும் ஜோக் என்பது தான் உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.