Home /News /entertainment /

வளர்த்து விட்ட சேனலை இப்படி சொல்லலாமா? விஜய் டிவி பாவனாவை திட்டும் ரசிகர்கள்!

வளர்த்து விட்ட சேனலை இப்படி சொல்லலாமா? விஜய் டிவி பாவனாவை திட்டும் ரசிகர்கள்!

விஜய் டிவி பாவனா

விஜய் டிவி பாவனா

”இனி அவர்களுடன் நான் எப்போதும் பணியாற்ற மாட்டேன்” என்னும் வகையில் பதில் அளித்துள்ளார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான பாவனா பாலகிருஷ்ணன் பன்முகக் கலைஞர். ஒரு ஆர்ஜே வாக தனது கேரியரைத் தொடங்கிய பாவனா, விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளரானார்.

    சின்னத்திரையில் நட்சத்திர தொகுப்பாளராக இருந்த பாவனா இந்திய அளவில் பிரபலமான ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், கிரிக்கெட் வர்ணனையாளராகவும் வளர்ச்சி அடைந்துள்ளார். சமீபத்தில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியின் ஸ்பெஷல் எபிசோடை தொகுத்து வழங்கிய பாவனா விஜய் டிவிக்கு மீண்டும் வருவாரா என்ற கேள்விக்கு அதிர்ச்சியூட்டும் பதிலை அளித்துள்ளார்.

    கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் Vs டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பாவனா இணைய இருக்கிறார் என்ற செய்தி வெளியான நாளிலிருந்து, பாவனா மீண்டும் தமிழ் சேனல்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக மாறுவாரா என்று கேள்வி எழுந்த வண்ணம் இருந்தது. தன்னுடைய சோஷியல் மீடியா கணக்கில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது குறித்து மிகவும் உற்சாகமாக இருப்பதாகக் கூறியிருந்தார். சோஷியல் பாவனா சிறப்பு எபிசோடுகளை தொகுத்து வழங்கினார்.

    தற்போது ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக மட்டுமே செயல்பட்டு வரும் பாவனா மறுபடியும் சின்னத்திரையில் தோன்றிய போது பலரும் அவர் கலர்ஸ் தமிழில் ஆன்கராக மீண்டினையப் போகிறார் என்றே எதிர்பார்த்தனர். ஆனால், ஒரு சில எபிசோடுகளில் மட்டுமே அவர் கலந்து கொள்கிறார் என்பது பின்னர் வெளியானது.

    சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்படும் பாவானவுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

    இதையும் படிங்க.. கனா காணும் காலங்கள்: ஆசைக்காட்டி கடைசியில் ரசிகர்களை ஏமாற்றிய விஜய் டிவி!

    சமீபத்தில் பாவனா அளித்த ஒரு பேட்டியில் விஜய் டிவியில் தன்னுடைய அனுபவங்களை பற்றி பகிர்ந்துள்ளார். அதே போல, மீண்டும் விஜய் டிவியில் பணியாற்றுவாரா? என்ற கேள்விக்கு விஜய் டிவிக்கு இனிமே நான் செல்ல மாட்டேன் என்றும் அவர்களுக்கும் எனக்கும் ஒத்துவராது என்று கூறியுள்ளார்.

    விஜய் டிவி. இப்போது எல்லா நிகழ்ச்சிகளையும் முழுக்க முழுக்க நகைச்சுவையான கண்ணோட்டத்தில் மட்டுமே எடுத்துக் கொண்டு செல்கிறார்கள். நகைச்சுவையாக தொகுத்து வழங்கினால் தான் அதிகப்படியான கவனம் கிடைக்கிறது. ஆனால் என்னால் அந்த அளவுக்கு நகைச்சுவையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முடியாது. இப்போது அது என்னுடைய ஸ்டைல் இல்லை எனவே, இனி அவர்களுடன் நான் எப்போதும் பணியாற்ற மாட்டேன்” என்னும் வகையில் பதில் அளித்துள்ளார்.

    இதையும் படிங்க.. டாப் கியரில் செல்லும் சன் டிவி சுந்தரி சீரியல்.. கதையில் அப்படி ஒரு ட்விஸ்ட்!

    இந்தியாவில் கிரிக்கெட்டை பொறுத்த வரை பெண் வர்ணனையாளர் மற்றும் தொகுப்பாளர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே இருக்கின்றனர். இந்திய அளவில் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்த விளையாட்டு பத்திரிக்கையாளர் மயன்த்தி லாங்கர். அவருக்குப் பிறகு, கிட்டத்தட்ட அதே அளவுக்கு கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தார் பாவனா பாலகிருஷ்ணன். தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி