Home /News /entertainment /

நீண்ட இடைவெளிக்கு பிறகு ரசிகர்களுக்கு பிடித்த விஜய் டிவி சீரியலில் டான்ஸர் ஆனந்தி!

நீண்ட இடைவெளிக்கு பிறகு ரசிகர்களுக்கு பிடித்த விஜய் டிவி சீரியலில் டான்ஸர் ஆனந்தி!

டான்ஸர் ஆனந்தி

டான்ஸர் ஆனந்தி

நடிகை ஆனந்தி அஜய்யுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்து கொண்ட போட்டோவை பதிவிட்டுள்ளார்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
  ஸ்டார் விஜய் டிவி-யில் காலை முதல் இரவு வரை சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. 

  இரவில் சீரியலை பார்க்க முடியாமல் தவற விட்டவர்கள் காலை நேரத்தில் பார்த்து கொள்ள வசதியாக பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழும் சரஸ்வதியும், பாக்கியலட்சுமி உள்ளிட்ட ஹிட் சீரியல்கள் மறுஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் "ராஜ பார்வை".ஒரு விபத்தில் சிக்கிய பிறகு பார்வைக் குறைபாடு ஏற்படும் இளைஞனின் வாழ்க்கையில் ஒரு பெண் நுழைந்த பிறகு ஏற்படும் நேர்மறை மாற்றங்களை அடிப்படையாக கொண்டு இந்த "ராஜ பார்வை" சீரியலின் கதைக்களம் பின்னப்பட்டுள்ளது. பணக்கார இளைஞனான ஆனந்த் விபத்தில் பார்வையை பறி கொடுக்க, தனது இளைய மகன் அரவிந்த் காரணம் என்று அவனை வெறுக்கும் தாய் மகாலட்சுமி. ஆனால் பார்வையை இழந்த ஆனந்த், தன தம்பி மீது மிகுந்த பாசம் கொண்டவர்.

  ஒரு நாள் கூட தம்பியை பிரிய விரும்பாதவர். சாரு என்ற மிடில் கிளாஸ் பெண் பார்வையற்ற ஆனந்தின் வாழ்வில் நுழைவதால் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அவர்களுக்கு இடையேயான மென்மையான காதல் நிகழ்வுகள் தற்போது கதையாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஹீரோவாக ஆனந்த கேரக்டரில் நடிகர் முனாஃப் ரஹ்மான், ஹீரோயினாக சாரு கேரக்டரில் நடிகை ரெஸ்மி ஜெயராஜ், அரவிந்தாக விகாஷ் சம்பத், மகாலட்சுமி கேரக்டரில் நடிகை ஆர்த்தி ராம்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

  இந்நிலையில் நடிகை ஆனந்தி அஜய் 'ராஜ பார்வை' சீரியலில் புதிதாக இணைந்து இருக்கிறார். இந்த தகவலை ராஜ பார்வை சீரியல் ஹீரோவான முனாஃப் ரஹ்மான், சின்னத்திரை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது சோஷியல் மீடியாவான இன்ஸ்டாவில் போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ள அவர், அதில் நடிகை ஆனந்தி அஜய்யுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்து கொண்ட போட்டோவை பதிவிட்டுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் "ராஜ பார்வை குடும்பத்திற்கு உங்களை வரவேற்கிறோம் ஆனந்தி, எங்கள் குடும்பத்தில் ஒருவரை நீங்கள் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி"என்று உற்சாகமாக தெரிவித்து இருக்கிறார். மேலும் புதிய கேரக்டர் அறிமுகம் .. சீரியலில் இனி புதிய திருப்பங்களை எதிர்பார்க்கலாம் என்று ரசிகர்களுக்கு தெரிவித்து உள்ளார்.வான்மதி என்ற கேரக்டரில் நடிகை ஆனந்தி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து நடிகை ஆனந்தி அஜயின் ரசிகர்கள் அனைவரும் அவரை "ராஜ பார்வை" சீரியலில் பார்க்க மிகவும் ஆர்வமாகவும், உற்சாகமாகவும் உள்ளனர். விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ஜோடி நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஆனந்தி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் டான்ஸ் ஷோவிலும் பங்கேற்று தனது டான்ஸ் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
  இவர் கார்த்திகை பெண்கள், யமுனா, கனா காணும் காலங்கள், மற்றும் கள்ளிகாட்டு பள்ளிகூடம் போன்ற சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர். இவர் வெள்ளித்திரையில் மீகாமன், தாரை தப்பட்டை உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இன்ஸ்டாவில் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவை ஷேர் செய்துள்ள ஆனந்தி விஜய் டிவி குடும்பத்திற்கு திரும்புவதில் மகிழ்ச்சி. தினமும் பிற்பகல் 1 மணிக்கு வரும் எங்கள் சீரியலுக்கு சப்போர்ட் செய்யவும் என்று ரசிகர்களை கேட்டு கொண்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Vijay tv

  அடுத்த செய்தி